Home /News /chennai /

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படும் - மத்திய அமைச்சர் தகவல்

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படும் - மத்திய அமைச்சர் தகவல்

சென்னை பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம்

சென்னை பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம்

திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி விமான நிலையம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

    சென்னையில் இரண்டாவது விமான நிலையம் பர்ந்தூரில் அமையவுள்ளதாக மத்திய விமானப் போக்குவத்துறை இணை அமைச்சர் விகே சிங் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

    நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி இரண்டாவது விமான நிலையம் அமைப்பது தொடர்பாக அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். எம்பி கனிமொழியின் கேள்விக்கு பரந்தூரில் தான் 2ஆவது விமான நிலையம் அமையவுள்ளது என அமைச்சர் பதில் அளித்தாார்.

    சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைப்பதன் மூலம் மாநிலத்தின் தொழில் மற்றும் வணிக வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியமாக கருதப்படுகிறது. எனவே புதிய விமான நிலையத்தை அமைக்க வேண்டிய தேவையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு மத்திய - மாநில அரசுகள் அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. தொடர்ந்து, சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான 4 இடங்களை தமிழ்நாடு அரசு தேர்வு செய்து இருந்தது. இந்த நான்கு இடங்களில் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பன்னூர் ஆகிய இரண்டு இடங்களை மத்திய அரசு இறுதி செய்துள்ளது. அதில் ஒன்றை தமிழ்நாடு அரசு இறுதி செய்ய பரிசீலித்து வருகிறது. பன்னூரில், 4 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டது. அதே போல, பரந்தூரில், 4 ஆயிரத்து 791 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டது. இரண்டு இடங்களிலும் இரு ஓடுபாதைகளுக்கு போதுமான இடமும் வான்வெளியும் உள்ளது.

    இதையும் படிங்க: தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    இடத்தேர்வை இறுதி செய்ய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சந்தித்து பேசினார். இந்த சூழலில் தான் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமையவுள்ளது அமைச்சரின் பதில் மூலம் தெரியவந்துள்ளது.

    பரந்தூர் ஊராட்சியானது காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் அருகே உள்ளது. இந்த இடம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சுமார் 60 கிமீ தொலைவிலும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 70 கிமீ தொலைவிலும் உள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Airport, Chennai Airport, Kanimozhi

    அடுத்த செய்தி