Home /News /chennai /

பள்ளி மாணவியை கடத்த முயன்ற மர்மநபர்கள்.. அதிர்ச்சியில் ஷேர் ஆட்டோவில் இருந்து குதித்த மாணவி..! - பட்டப்பகலில் துணிகரம்

பள்ளி மாணவியை கடத்த முயன்ற மர்மநபர்கள்.. அதிர்ச்சியில் ஷேர் ஆட்டோவில் இருந்து குதித்த மாணவி..! - பட்டப்பகலில் துணிகரம்

ஆட்டோவில் இருந்து குதித்து தப்பிய பள்ளி மாணவி

ஆட்டோவில் இருந்து குதித்து தப்பிய பள்ளி மாணவி

Chennai district News: சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்துகொண்டிருந்த 9ஆம் வகுப்பு மாணவியை, கடத்த முயன்றதால், உஷாரான மாணவி ஆட்டோவில் இருந்து கீழே குதித்து தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    சென்னை புது வண்ணாரப்பேட்டை சேர்ந்த  மாணவி தண்டையார் பேட்டையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வருகிறார். மாணவி வழக்கம் போல் பள்ளி செல்ல ஷேர் ஆட்டோவில் ஏறியுள்ளார். அந்த ஆட்டோவில் ஏற்கனவே 25வயது மதிக்கதக்க இரண்டு நபர்கள்  திருவொற்றியூர் சுங்கசாவடியிருந்து தங்கசாலை செல்வதற்காக பயனித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னை புதுவண்ணாரப்பேட்டையை ஆட்டோ நெருங்கியபோது மாணவியை அவர்கள் கைகுட்டை வைத்து வாயில் அடைக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது சுதாரித்துக் கொண்ட அந்த மாணவி, ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் மாணவியின் மூக்கு தாடை போன்ற பகுதிகளில் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    உடனடியாக ஆட்டோவை நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர், அந்த மாணவியை தூக்க முற்பட்ட நேரத்தில் மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர். உடனடியாக அங்கு கூடியிருந்த பொதுமக்கள் போலீசாருக்கு இது குறித்து தகவல் அளித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் மாணவியை முதலுதவி சிகிச்சைக்காக மருத்தவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    Must Read : இந்துக்கள் கொண்டாடிய மொஹரம் பண்டிகை..! - மத நல்லிணக்கத்திற்கு உதாரணமான முதுவன் திடல் கிராமம்

    இந்நிலையில், அந்தமாணவியிடமும் ஆட்டோ ஓட்டுநரான சார்லஸிடமும் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஓடும் ஷேர் ஆட்டோவில் இருந்து மாணவி குதித்து, கடத்தல் சம்பவத்தில் இருந்து தப்பித்த சம்பவம் புதுவண்ணாரப்பேட்டையின் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் - அசோக்குமார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Chennai, Crime News, Kidnapping Case, School student, Share Auto

    அடுத்த செய்தி