Home /News /chennai /

ஆசிரியர் திட்டியதால் பள்ளி மாணவி தற்கொலை..! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

ஆசிரியர் திட்டியதால் பள்ளி மாணவி தற்கொலை..! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

தாம்பரம் அரசு மருத்துவமனை

தாம்பரம் அரசு மருத்துவமனை

Chennai | பல்லாவரம் அருகே சரியாக படிக்கவில்லை என ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த பள்ளி மாணவி துப்பட்டாவால் தன்னை தானே கழுத்தை இறுக்கி தற்கொலை செய்துக் கொண்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர்  பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சமீப காலமாக இவர் பள்ளி பாடங்களை ஒழுங்காக படிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அவரது ஆசிரியர்  கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி கடந்த சில தினங்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று வீட்டில் அனைவரும் அவரவர் வேலைக்கு செல்லும் வரை பள்ளிக்கு தயாராவது போல் ரெடியாகி கொண்டிருந்தவர் வீட்டில் அனைவரும் அவரவர் பணிக்கு கிளம்பியவுடன் தனது துப்பட்டாவால் தன்னைத்தானே கழுத்தை இறுக்கி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

    இதனிடையே வெளியில் சென்றிருந்த பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்த போது மாணவி  துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது.

    Also see... ஓடும் ரயிலில் விழ இருந்த பெண்ணை நொடியில் காப்பாற்றிய ஆர்.பி.எஃப் காவலர்... வைரலாகும் சிசிடிவி காட்சி...

    இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்த மாணவியின்  உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர்: சுரேஷ், பல்லாவரம்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chennai, Commit suicide, Crime News, School student

    அடுத்த செய்தி