ஹோம் /நியூஸ் /சென்னை /

அரசு பேருந்தை நிறுத்தி ”மேரி மீ” பாட்டுக்கு ரீல்ஸ் செய்த இளைஞர்கள்.. போலீசார் கொடுத்த நூதன தண்டனை..!

அரசு பேருந்தை நிறுத்தி ”மேரி மீ” பாட்டுக்கு ரீல்ஸ் செய்த இளைஞர்கள்.. போலீசார் கொடுத்த நூதன தண்டனை..!

அரசு பேருந்தை நிறுத்தி ”மேரி மீ” பாட்டுக்கு ரீல்ஸ் செய்த இளைஞர்கள்.. போலீசார் கொடுத்த நூதன தண்டனை..!

ரீல்ஸை பார்த்த வண்ணாரப்பேட்டை போலீசார் இணைய முகவரியின் அடிப்படையில் நடமாடிய இருவரையும் போலீசார் பிடித்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சாலையில் சென்றுக்கொண்டிருந்த பேருந்தை நிறுந்தி இளைஞர்கள் சிலர் வெளிட்ட இன்ஸ்டா ரீல்ஸ் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பரவியது. இளைஞர்களை விசாரித்த போலீசார் நூதன முறையில் தண்டனை வழங்கினார்.

  சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது சில பாடல்கள் ட்ரெண்ட் ஆவது வழக்கம்.அப்படி ட்ரெண்ட் ஆகும் பாடல்களுக்கு பலரும் தங்கள் பாணியில் வீடியோ எடுத்து பதிவிடுவர்.அப்படி சமீபத்தில் வெளியான 'மேரி மீ' என்ற பாடல் இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

  இந்த பாடலுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முகத்தை மறைத்தபடி இடுப்பை ஆட்டி சுழற்றியபடி ஆடுவதுதான் ட்ரெண்ட். இந்த சர்வதேச சாதனையை அரங்கேற்ற வேண்டும் என்ற ஆசையில் பலரும் இது போன்று வீடியோ வெளியிட்டு வந்தனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் இந்த சாதனையை செய்ய சாலையில் சென்ற அரசு பேருந்தை மடக்கிய இரண்டு இளைஞர்கள் மேரி மீ பாடலுக்கு ரீல்ஸ் வெளியிட்டனர்.

  Read More : மாற்றுத்திறனாளியை தாக்கி அரசு பேருந்திலிருந்து கீழே இறக்கிவிட்ட நடத்துநர்.. திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்!

  பெரிய சாதனை படைத்த சந்தோஷத்தில் இருந்த இளைஞர்கள் அடுத்தடுத்து இதேபோன்று பல ஆபத்தான வீடியோக்களை வெளியிட்டனர். ரீல்ஸை பார்த்த வண்ணாரப்பேட்டை போலீசார் இணைய முகவரியின் அடிப்படையில் நடமாடிய இருவரையும் போலீசார் பிடித்தனர். விசாரணையில் பிடிபட்ட மூவரும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் என்று தெரியவந்தது. இதையடுத்து மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மூவருக்கும் அபராதம் விதித்தனர்.

  மேலும் மூவரையும் இரண்டு நாட்கள் போக்குவரத்து சீர் செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபடுத்தி நூதன தண்டனை விதித்துள்ளனர். அதன்படி மாணவர்கள் இருவரும் வாகனங்கள் செல்லும் சாலையில் நின்று மைக் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசி வருகின்றனர்.

  செஸ் ஒலிம்பியாடு விளம்பரத்திற்காக நேப்பியர் பாலத்தில் சதுரங்க பலகை போல் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. ஆனால் இதையும் விடாத சில இளைஞர்கள் பாலத்தின் மீது ஏறி ஆபத்தான வகையில் வீடியோ வெளியிட்டுள்ளனர் இந்த வீடியோ அடிப்படையிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Chennai, Crime News, Instagram