ஹோம் /நியூஸ் /சென்னை /

பேருந்தில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் பலி : படிக்கட்டில் பயணம் செய்தபோது நேர்ந்த விபரீதம்!

பேருந்தில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் பலி : படிக்கட்டில் பயணம் செய்தபோது நேர்ந்த விபரீதம்!

பள்ளி மாணவன் பலி

பள்ளி மாணவன் பலி

சென்னையடுத்த வண்டலூர் - கேளம்பாக்கம் பிரதான சாலையில் கண்டிகை பேருந்து நிறுத்தம் அருகே பள்ளி மாணவன் பேருந்தில் இருந்து கீழே விழுந்து பலியானார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சென்னை தாழம்பூர் அருகே பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த 11-ம் வகுப்பு மாணவன் யுவராஜ் படியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  சென்னையை அடுத்த நல்லம்பாக்கம் கலைஞர் தெருவை சேர்ந்தவர் 16 வயதான யுவராஜ். இவர் மாம்பாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று வழக்கம்போல் கண்டிகை பேருந்து நிலையத்தில் தாம்பரத்திலிருந்து கேளம்பாக்கம் நோக்கி சென்ற மாநகர அரசு பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் முன்பக்க படிக்கட்டில் தொங்கியபடி யுவராஜ் பயணம் செய்துள்ளார்.

  இதையும் படிங்க : சிறுமியின் தலையை துண்டித்து பூஜை - நள்ளிரவில் மயானத்தில் மாந்திரீகம் - மந்திரவாதிகளின் அட்டூழியம்

  பேருந்து கண்டிகை HP பெட்ரோல் பங்க் எதிரே  வந்தபோது திடீரென படிக்கட்டில் இருந்து மாணவன் யுவராஜ் தவறி கீழே விழுந்த நிலையில், பேருந்தின் பின் சக்கரத்தின் டயர், மாணவன் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

  இச்சம்பவம் குறித்து தாழம்பூர் போலீசார் மற்றும் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Published by:Lakshmanan G
  First published:

  Tags: Accident, Bus accident, School student