நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து, ஆசிரியர்களின் 15 வகையான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பள்ளிக்கல்வி துறைஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்த திட்டமிட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் ஜாக்டோ ஜியோ மாநாட்டிற்கு முன்னதாக , இது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக அரசு பதவியேற்றதற்குப்பின், பல துறைகளில் பலவகையான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் , பள்ளிக் கல்வித் துறையில் பெரிதாக எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. இது ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிருப்தியாக வருகிறது.
இந்நிலையில், செப்டம்பர் 10ஆம் தேதி ஜாக்டோ ஜியோ நடத்தும் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். இந்த மாநாட்டிற்கு முன்னதாக ஆசிரியர்கள் வலியுறுத்தக் கூடிய பல கோரிக்கைகளில் சில கோரிக்கைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக நிதி அமைச்சரை சந்தித்து, பள்ளிக்கல்வி அமைச்சர் பதினைந்து வகையான கோரிக்கைகளை வலியுறுத்துவதற்கு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
15 கோரிக்கைகள் என்னென்ன?
விடுபட்டு போன 171 தொழிற்கல்வி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது, எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை கூடுதல் ஆசிரியர்களை பணி நியமனம் செய்வது, அரசு மாதிரி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வது, அரசாணை 101 மற்றும் 108 ஆகியவற்றை சீரமைப்பு செய்வது, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமனம் செய்வது, அரசுப் பள்ளிகளில் 2500 வகுப்பறைகளை கட்டுவது உள்ளிட்டவை நிதி அமைச்சர் உடனான சந்திப்பின் போது இடம் பெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
நிதி அமைச்சரும், பள்ளி கல்வி அமைச்சரும் இடையேயான சந்திப்பு, இன்று அல்லது நாளை நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Also see... சுங்க கட்டண உயர்வு... வாகன உரிமையாளர்கள் அதிருப்தி...
ஆசிரியர்கள் முக்கியமாக எதிர்பார்க்கும் கோரிக்கைகளில் ஒன்றான, அதிமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட அரசாணைகள் 101 , 108ஐ ரத்து செய்வது என்ற கோரிக்கை, நிதி அமைச்சர் உடனான சந்திப்பின் போது வலியுறுத்தப்பட இருக்கிறது. எனினும் மிக முக்கியமான பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம், சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளோ, அல்லது பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் இடம்பெறுவது தொடர்பான கோரிக்கையோ அமைச்சர் அன்பில் மகேஷ் அஜெண்டாவில் இடம்பெறவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Education department, Govt teachers, Minister Anbil Mahesh, Minister Palanivel Thiagarajan