Home /News /chennai /

ஓ.பி.எஸ் பணத்தை கையாடல் செய்தார் - உச்சநீதிமன்றத்தில் இ.பி.எஸ் தரப்பு பகிரங்க குற்றச்சாட்டு!

ஓ.பி.எஸ் பணத்தை கையாடல் செய்தார் - உச்சநீதிமன்றத்தில் இ.பி.எஸ் தரப்பு பகிரங்க குற்றச்சாட்டு!

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்.

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்.

பண விவகாரங்களில் ஓ.பன்னீர்செல்வம் கையாடல்கள் நடத்தியுள்ளதாகவும், அத்தகைய நபரிடம் நீதிமன்றம் அலுவலக சாவியை ஒப்படைக்கக் கூடாது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India
    ஓ. பன்னீர்செல்வம் பணத்தை கையாடல் செய்தார் எனவும் அவரிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க கூடாது எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

    அதிமுக அலுவலக சாவியை தன்வசம் ஒப்படைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் மனு தாக்கல் செய்திருந்தார். அதற்கு இபிஎஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஓ.பன்னீர்செல்வம், அலுவலக சாவியை தன் வசம் ஒப்படைக்கக் கோருவதில் எந்த முகாந்தரமும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

    பண விவகாரங்களில் ஓ.பன்னீர்செல்வம் கையாடல்கள் நடத்தியுள்ளதாகவும், அத்தகைய நபரிடம் நீதிமன்றம் அலுவலக சாவியை ஒப்படைக்கக் கூடாது என்பது மட்டுமல்ல ஒப்படைக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

    அதிமுக அலுவலகத்தில் ஒ.பன்னீர்செல்வம் தன் தரப்பு ஆதரவாளர்களுடன் வன்முறையில் ஈடுபட்டு பொருட்களை சேதப்படுத்தியுள்ளதாகவும், இவ்வாறு கட்சிக்கு எதிராக செயல்படும் ஒருவர் அலுவலக நிர்வாக உரிமையை கோர முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    இதையும் வாசிக்க: திருப்பதியில் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் சாமி தரிசனம்..!

    மேலும்,   அதிமுக அலுவலக சாவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் இபிஎஸ் தாக்கல் செய்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதனிடையே, அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்கும் விவகாரம் என்பது நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது என, தென்சென்னை வருவாய் கோட்டாட்சியர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் வருவாய் கோட்டாட்சியர் முடிவுகளை தனிப்பட்ட முறையில் எடுக்கவில்லை எனவும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையே செயல்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: ADMK, Money Laundering, OPS - EPS, Supreme court

    அடுத்த செய்தி