முகப்பு /செய்தி /சென்னை / இந்த புத்தகங்களை நீங்கள் படித்திருக்கீர்களா? சரமாரி கேள்வி எழுப்பி சவுக்கு சங்கரின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

இந்த புத்தகங்களை நீங்கள் படித்திருக்கீர்களா? சரமாரி கேள்வி எழுப்பி சவுக்கு சங்கரின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

சவுக்கு சங்கரின் மனு தள்ளுபடி

சவுக்கு சங்கரின் மனு தள்ளுபடி

Savukku Shankar Case | புத்தகங்கள் குறித்து நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என சவுக்கு சங்கருக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

கடலூர் சிறை கைதிகளுக்கு புத்தகம் வழங்க அனுமதிக்கோரி பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் சிறையில் உள்ள கைதிகள் படிப்பதற்காக ரூ.15,000 மதிப்புள்ள 76 புத்தகங்களை இலவசமாக வழங்க முடிவு செய்து அதனை பெற்றுக்கொள்ளுமாறு சிறைத்துறை டிஜிபிக்கு கடிதம் எழுதியாக கூறியுள்ளார். ஆனால் அரசியல் காரணங்களால் தமது புத்தகங்களை ஏற்றுக்கொள்ள சிறைத்துறை மறுத்து விட்டதாகவும் மனுவில் சவுக்கு சங்கர் குற்றம்சாட்டியுள்ளார். எனவே தமது புத்தகங்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமென சிறைத்துறை டிஜிபிக்கு உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த புத்தகங்களை நீங்கள் படித்திருக்கீர்களா? கைதிகளின் வாழ்க்கைக்கு இந்த புத்தகங்கள் உதவும் என எவ்வாறு கூறுகிறீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

விளம்பர நோக்கத்திற்காக இது போன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்படும் முன் புத்தகங்கள் குறித்து நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் எனக்கூறி சவுக்கு சங்கரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

First published:

Tags: Chennai High court, Savukku Shankar