ராஜாஜி காலத்தில் மதுவிலக்கு சாத்தியமானது எப்படி என்பது குறித்து ஆராய வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத் குமார் கூறியுள்ளார்.
சென்னை ராஜரத்தினம் அரங்கத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.
அதில் பேசிய அவர், “போராட்டத்திற்கு நேற்றிரவு 10.30 மணிக்கு தான் அனுமதி கிடைத்தது. இந்த உண்ணாவிரத நோக்கம் பூரண மது விலக்கு கொண்டு வருவதே. மதுவிலக்கை கொண்டுவருவதால் மதுவின் மூலம் அரசுக்கு வருமானத்தை ஈடு செய்வதில் சிரமம் இருக்கிறது , அதற்கு மாற்று யோசனையை முன்வைக்க உள்ளோம்.
காவல்துறையின் சிறப்பான செயல்பாட்டை மீறி போதைப் பொருள் கடத்தப்படுகிறது. பள்ளிச் சிறுவர்கள் போதைப்பொருள்களை பயன்படுத்துகின்றனர்” என தெரிவித்தார்.
மேலும், “மதராஸ் மாகாணமாக இருந்தபோது மதுவிலக்கு சாத்தியமாக இருந்துள்ளது. ராஜாஜி காலத்தில் சாத்தியமானது எப்படி என்பது குறித்து ஆராய வேண்டும். மது ஆலைகளை மூட முடியாவிட்டால் அதை வேறு வெளிமாநிலத்திற்கு மாற்றலாம், மது ஆலை என்பதும் ஒரு தொழில்தான்” என கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor sarath kumar, Alcohol