முகப்பு /செய்தி /சென்னை / மீனவர் மீது துப்பாக்கிச்சூடு... இந்திய கடற்படை நிதானத்துடன் செயல்பட அறிவுரை வழங்க வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

மீனவர் மீது துப்பாக்கிச்சூடு... இந்திய கடற்படை நிதானத்துடன் செயல்பட அறிவுரை வழங்க வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி

Indian Navy Firing on TamilNadu Fishermen | தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் நடத்தியுள்ள துப்பாக்கி சூடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

  • Last Updated :
  • Chennai, India

இந்திய கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (21-10-2022) கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், 10 மீனவர்கள் (தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர், காரைக்காலை சேர்ந்த 3 பேர்) தங்களது விசைப்படகில் நடுக்கடலில் இன்று (21-10-2022) மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது. ஐ.என்.எஸ் பங்காரம் என்ற கப்பலில் பாதுகாப்பு பணியிலிருந்த இந்திய கடற்படையினர், இந்த மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

அதில் வீரவேல் என்ற மீனவரின் மீது குண்டு பாய்ந்து, அவர் பலத்த காயங்களுடன் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வருகிறார். எனவே இச்சம்பவத்தில் இந்திய கடற்படையினரின் செயல் மிகுந்த வருத்தத்திற்குரியது. இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அவ்வப்போது தாக்கப்படுவதால் ஏற்படும் துயரத்தை பிரதமர் நன்கு அறிவார்.

இதையும் படிங்க : வீடியோ: விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞருக்கு உதவிய முதலமைச்சர் ஸ்டாலின்!

இந்திய கடற்படையினரே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது அது அடித்தட்டில் வாழும் மீனவர்களிடையே நம்பிக்கையின்மையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துவதாக அமைகிறது. எனவே,  பிரதமர்  இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, இந்திய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை, இந்திய பாதுகாப்பு முகமையினர் மிகுந்த எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் கையாளுவதற்கு உரிய

top videos

    அறிவுரைகளை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

    First published:

    Tags: Chennai, CM MK Stalin, Fisherman, Indian Navy, PM Modi