ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னை தனியார் பள்ளியில் 2வது நாளாக ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்... எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்பு

சென்னை தனியார் பள்ளியில் 2வது நாளாக ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்... எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்பு

ஆர்.எஸ்.எஸ். பயிற்சி

ஆர்.எஸ்.எஸ். பயிற்சி

இந்த பயிற்சி முகாமில் ஆர் எஸ் எஸ்சினுடைய நிர்வாகிகள் ஆர்.எஸ்.எஸ்.தென்மண்டல முக்கிய நிர்வாகிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை அண்ணா நகரில் உள்ள ஜெயகோபால்கரோடியா விவேகானந்தர் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தென் மண்டல அமைப்புகள் ஒன்றிணைந்து ஆர்.எஸ்.எஸ் வளர்ச்சி பணிகள் குறித்து இதில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆர்எஸ்எஸினுடைய பயிற்சி முகாம்கள் பள்ளிகளில் நடத்த அனுமதி இல்லை என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. குறிப்பாக தனியார் பள்ளிகளிலும் ஆர் எஸ் எஸ் பயிற்சி முகாம்கள் நடத்த அனுமதி இல்லை என்று தெரிவித்திருந்த நிலையில் தற்போது சென்னை அண்ணா நகரில் உள்ள ஜெயகோபால் கரோடியா விவேகானந்தர் பள்ளியில் ஆர் எஸ் எஸ் இன் இரண்டாவது நாள் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த பயிற்சி முகாமில் ஆர் எஸ் எஸ்சினுடைய நிர்வாகிகள் ஆர்.எஸ்.எஸ்.தென்மண்டல முக்கிய நிர்வாகிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். நேற்று துவங்கிய இந்த பயிற்சி இன்று மாலையுடன் நிறைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியின்போது பல்வேறு முக்கிய ஆலோசனைகளில் ஈடுபடும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: இன்றோடு காலாவதியாகும் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டம்- ஆளுநருக்கு அன்புமணி கோரிக்கை

குறிப்பாக ஆர் எஸ் எஸ் தமிழகத்தில் வளர்ச்சி பெறுவதற்கு எந்த மாதிரியான பணிகளை செய்ய வேண்டும் குறிப்பாக தேர்தல் வெற்றிக்கு ஆர்எஸ்எஸ்-இன் பணிகள் என்ன என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியுள்ளது

First published:

Tags: Private schools, RSS