குடும்பம் மற்றும் நண்பர்களுடன் திரையரங்கில் படம் பார்பது அனைவருக்கும் பிடித்த பொழுதுபொக்காகும். என்னதான் ஒடிடி (OTT) தளங்கள் பெருகினாலும் திரையரங்கில் வந்து படம் பார்ப்பது என்பது அலாதியான அனுபவம். ஆனால் சமீப காலத்தில், திரைப்பட டிக்கெட்டுகள் மற்றும் தின்பண்டங்களின் விலைகள் அதிகமாக இருப்பதாக, குறிப்பாக வார இறுதி நாட்களில் வழக்கத்தை விட மிகவும் அதிக விலைக்கு விற்கப்படுவதாக மக்களிடமிருந்து குற்றச்சாட்டு இருந்து கொண்டே இருக்கின்றது.
ஒவ்வொரு திரைப்பட பார்வையாளர்களும் பிடித்தமான, அதிகபட்சமாக விரும்பி உண்ணக்கூடிய பிரபலமான தின்பண்டங்களில் ஒன்று ‘பாப்கார்ன்.’ பாப்கார்ன் இயல்பாகவே திரைப்படம் பார்த்துக்கொண்டே சாப்பிடுவதற்கு ஏதுவான தன்மையுடையதாய் இருக்கும். அதனால் தான் இது பலராலும் தேர்வு செய்யப்படுகிறது. பாப்கார்ன் ருசியை அனுபவிப்பதற்காகவே திரையரங்கிற்கு செல்பவர்களும் உண்டு.
Also Read : லண்டனில் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் ஜாலி டைம்... படங்களைப் பகிர்ந்த சுஹாசினி!
அவ்வபோது அதன் விலை ஏறிக்கொண்டே வருவதால் அது சாமானியர்களின் கைக்கு எட்டாமல் போய்விடுகிறது. பொது இடங்களில் 50 ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்கப்படும் பாப்கார்ன்கள் திரையரங்குகளில் மட்டும் ஏன் அதிக விலைக்கு விற்கப்படுகிறது என்பது திரையரங்கிற்கு செல்லும் ஒவ்வொருவரின் கேள்வியாக உள்ளது. அதனால் இது விவாதிக்க கூடிய ஒன்றாக மாறியது. ஆனால் மல்டிபிளெக்ஸை பொறுத்தவரை அதன் செயல்பாட்டுச் செலவுகளை ஈடுகட்டுவதற்காக தின்பண்டங்கள் அதிக விலைக்கே விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது தியேட்டருக்கு படம் பார்க்க வருபவர்களை கவரும் விதமாக சென்னை ஐநாக்ஸ் திரையரங்குகளில் கோக், பாப்கார்ன் விலை ரூ.180 வரை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி லார்ஜ் பாப்காரன் மற்றும் லார்ஜ் கோக் 280 ரூபாயிலிருந்து 180 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரா கோக் விலை 320 ரூபாயிலிருந்து 220 ரூபயாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பாப்கார்ன் டப் (TUB) 350 ரூபாயிலிருந்து 220 ரூபாயாகவும் பெரிய பாப்கார்ன் டப் (BIG TUB) 430 ரூபாயிலிருந்து 250 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.