முகப்பு /செய்தி /சென்னை / பாஜகவின் வெறுப்பு அரசியல் தமிழ்நாட்டு மண்ணில் எடுபடாது: ஆர்.எஸ்.பாரதி காட்டம்

பாஜகவின் வெறுப்பு அரசியல் தமிழ்நாட்டு மண்ணில் எடுபடாது: ஆர்.எஸ்.பாரதி காட்டம்

ஆர்.எஸ்.பாரதி

ஆர்.எஸ்.பாரதி

RS Bharathi | அண்ணாமலையைப் போன்றவர்கள் எத்தனை வேடம் போட்டு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள் என ஆர்.எஸ்.பாரதி காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

பா.ஜ.கவின் வெறுப்பு அரசியல் தமிழ்நாட்டு மண்ணில் ஒருபோதும் எடுபடாது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’திமுக இந்திக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் செய்வதன் விளைவால்தான் வதந்திகூட உண்மைபோன்ற அச்சத்தை உருவாக்கிவிட்டது என்று மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட அண்ணாமலை நினைப்பதாக சாடியுள்ளார். இந்தித் திணிப்புக்கு எதிரான திமுகவின் உறுதியான நிலைப்பாடு என்பது இந்தி பேசும் மக்கள் மீதான வெறுப்பாக ஒருபோதும் இருந்ததே இல்லை என்று கூறியுள்ளார்.

இந்தி மட்டும்தான் தேசியமொழி, ஆட்சிமொழி, அதைப் படித்தால் மட்டும்தான் வேலை என்கிற பா.ஜ.கவின் மொழித்திணிப்பை அம்பலப்படுத்தி, இந்தியையே தாய்மொழியாகக் கொண்டவர்கள்கூட தமிழ்நாட்டுக்குத்தான் வேலை தேடி வருகிறார்கள் என்பதுதான் தி.மு.கவினரின் பரப்புரையே தவிர, எந்த ஒரு மொழி பேசுபவருக்கும் எதிரான பிரச்சாரம் அல்ல என்றும் விளக்கமளித்துள்ளார்.

உண்மைக்கு மாறாக, வதந்தியைத் தொடர்ந்து பரப்பும் உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகிகளை நோக்கி கேள்வி கேட்க வேண்டிய அண்ணாமலை, தமிழ்நாட்டின் முதலமைச்சரை நோக்கி அறிக்கை அம்பு விடுவது என்பது அரசியல் உள்நோக்கமின்றி வேறில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர் பற்றிய அறிக்கை.. அண்ணாமலை மீது கலவரத்தை தூண்டுவதாக வழக்குப்பதிவு...!

அண்ணாமலையைப் போன்றவர்கள் எத்தனை வேடம் போட்டு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று கூறியுள்ள ஆர்.எஸ் பாரதி, இனியும் தொடர்ந்து வதந்தி பரப்பி வன்முறைச் சூழலை உருவாக்க நினைத்தால் சட்டரீதியான நடவடிக்கையைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

First published:

Tags: Annamalai, RS Bharathi