ஹோம் /நியூஸ் /சென்னை /

முதல் அரையாண்டில் மட்டும் ரூ.945 கோடி வரி வசூல்.. சென்னை மாநகராட்சி தகவல்

முதல் அரையாண்டில் மட்டும் ரூ.945 கோடி வரி வசூல்.. சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி

கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டை விட ரூ. 345 கோடி கூடுதல் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.945 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் இது கடந்த ஆண்டை விட ரூ.345 கோடி அதிகம் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்களுக்கு உட்பட்டு 200 வார்டுகள் உள்ளன. இதற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கட்டிட மற்றும் நில உரிமையாளர்களிடம் சொத்து வரியும் தொழில் மற்றும் வணிகம் சார்ந்து இயங்கும் கட்டிடங்களில் தொழில் வரியும், தொழில் உரிமம் வரியும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2022-23 ம் நிதியாண்டின் முதல் அரையாண்டு ஆகஸ்ட் 30ம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. குறிப்பாக முதல் அரையாண்டில் மட்டும் ரூ.945 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் வருவாயை உயர்த்தவும், நீண்டகால நிலுவையில் உள்ள வரியை வசூலிக்க வேண்டும் என மண்டல அதிகாரிகளுக்கு மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது.

இதனடிப்படையில் ஒவ்வொரு மண்டலங்களிலும் நிலுவை வரி மற்றும் நடப்பாண்டு வரியை வசூலிக்க அதிகாரிகள் தீவிரம் காண்பித்தனர். மேலும் உரிய நேரத்தில் வரியை செலுத்துபவர்களுக்கு சலுகைகளையும் மாநகராட்சி அளித்தது. இதன் காரணமாக கடந்த நிதியாண்டின் மொத்த வரி வருவாய்க்கு நிகராக நடப்பாண்டின் முதல் அரையாண்டிலேயே வரி வசூல் ஆகியுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

குறிப்பாக கடந்த 2021-2022  நிதியாண்டில் மொத்தமே ரூ. 1,240 கோடி வரி வசூலாகியிருந்தது. ஆனால் தற்போது முதல் அரையாண்டில் மட்டும் ரூ. 945 கோடி வசூலாகியுள்ளது என தெரிவித்துள்ளது. 2022-23ம் நிதியாண்டில் மொத்தம் ரூ. 1700 கோடி வரி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்க: தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இந்நிலையில், மாநகராட்சியின் வருவாயை மேலும் அதிகரிக்க  பெரு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள், தனியார் பள்ளிக்கூடங்கள் , கல்லூரிகள், தொழிற்சாலைகள் , நட்சத்திர விடுதிகள் குடியிருப்புகளின் அளவுகளை மறு மதிப்பீடு செய்து அதற்கேற்ப வரி தொகையை வரிவசூலிக்க திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

குறிப்பாக, நடப்பு நிதியாண்டின் வரிகளையும், நிலுவையில் உள்ள வரிகளையும் விரைந்து செலுத்த பொதுமக்கள் தாமாகவே முன்வர வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

வரி வசூல் ஒப்பீடு:

வ. எண்வரி வகை2021-2022 (முதல் அரையாண்டு)2021-2022 (2ம் அரையாண்டு)2022-2023 (முதல் அரையாண்டு)
1சொத்துவரிரூ. 375 கோடிரூ. 403 கோடிரூ. 697 கோடி
2தொழில் வரிரூ. 225 கோடிரூ. 237 கோடிரூ. 248 கோடி
3மொத்தம் ரூ. 600 கோடி ரூ. 640 கோடிரூ. 945 கோடி

கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டை விட ரூ. 345 கோடி கூடுதல் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Chennai, Chennai corporation, Property tax