முகப்பு /செய்தி /சென்னை / சென்னையில் ரூ.2.13 கோடி மதிப்பில் தயாராகும் மாடி பூங்கா!

சென்னையில் ரூ.2.13 கோடி மதிப்பில் தயாராகும் மாடி பூங்கா!

ரூ.2.13 கோடி மதிப்பில் தயாராகும் மாடி பூங்கா

ரூ.2.13 கோடி மதிப்பில் தயாராகும் மாடி பூங்கா

Chennai News : சென்னை மாநகராட்சி சார்பில் முதல் முறையாக நன்கு வடிவமைக்கப்பட்ட நடைபாதைகள் மற்றும் பசுமையுடன் கூடிய மாடி பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை, ராயபுரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனை அருகே சுமார் 2.13 கோடி ரூபாய் மதிப்பில் மாடி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இது சுமார் 6,865 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.

இந்த பூங்காவில் எல்.ஈ.டி விளக்குகள், குழந்தைகள் விளையாடும் இடம், பொது மக்கள் அமருவதற்கான இட வசதி, யோகா தியானம் செய்வதற்கு தனி இடம், நடப்பதற்கு நன்கு வடிவமைக்கப்பட்ட நடைபாதை வசதி மற்றும்  நவீன கழிப்பறை வசதி உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.

மக்கள் ஏறி, இறங்க சாய்தள நடைபாதை வசதி என ஒரு கிலோ மீட்டர் சுற்றுநீள நடைபாதை உள்ளிட்ட  அம்சங்களுடன் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் நிறைவுபெற்று பூங்கா ஏப்ரல் மாதத்திற்குள்  திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை போன்ற நெரிசல் மிகுந்த பகுதிகளில் இதுபோன்ற மாடி பூங்கா திட்டம்  பயனுள்ளதாக அமையும்.

First published:

Tags: Chennai, Local News