Home /News /chennai /

திருவான்மியூரில் ரவுடி வெட்டிக்கொலை.. மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வந்தபோது மர்மநபர்கள் வெறிச்செயல்

திருவான்மியூரில் ரவுடி வெட்டிக்கொலை.. மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வந்தபோது மர்மநபர்கள் வெறிச்செயல்

கொலை சம்பவம் நடைபெற்ற பாரதிதாசன் தெரு

கொலை சம்பவம் நடைபெற்ற பாரதிதாசன் தெரு

Chennai | மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற ரவுடியை இருவர் சரமாறியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் சென்னை திருவான்மியூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    சென்னை திருவான்மியூர் மாநகராட்சி பள்ளி அருகே ரவுடி சரவணன் மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வந்தபோது வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார்.

    நேற்று மாலை தனது மனைவி ரெபேக்காவுடன் காய்கறி மார்கெட்டிற்கு சென்று கொண்டிருந்த போது பாரதிதாசன் சாலை அருகே பின்தொடர்ந்து பைக்கில் வந்த இருவர் ரவுடி ஓலை சரவணனை வெட்டி படுகொலை செய்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர்.

    திருவான்மியூர் திருவீதியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பெயிண்டர் கதிர்வேல் தம்பி சுரேஷை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு சென்றுவிட்டு 3 மாதங்களுக்கு முன்னர் வெளியே வந்தார் ரவுடி ஓலை சரவணன். இவர் மீது 1 கொலை வழக்கு, ஒரு கொலை முயற்சி வழக்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Also see... ஆசிரியர்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை..! கேக் வெட்டி ஆசிரியர் தினத்தை கொண்டாடிய மாணவர்கள்

    ரவுடி ஓலை சரவணனின் உடலை கைபற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் இந்த கொலை பழிக்கு பழியாக  நடந்துள்ளதா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என்று  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர்: ப.வினோத்கண்ணன், இசிஆர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chennai, Crime News, Murder, Thiruvanmiyur

    அடுத்த செய்தி