முகப்பு /செய்தி /சென்னை / திடீரென வெடித்து சிதறிய நாட்டு வெடிகுண்டு.. கைகளை இழந்த பிரபல ரவுடி.. அம்பத்தூரில் பரபரப்பு சம்பவம்

திடீரென வெடித்து சிதறிய நாட்டு வெடிகுண்டு.. கைகளை இழந்த பிரபல ரவுடி.. அம்பத்தூரில் பரபரப்பு சம்பவம்

மாதிரி படம்

மாதிரி படம்

Crime News : அம்பத்தூரில் வீட்டில்  நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது வெடித்து சிதறியதில் 2 கைகளை இழந்த பிரபல ரவுடி.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை அம்பத்தூர் ஒரகடம் வெங்கடேஸ்வரா நகர் ஏரிக்கரை பகுதியில் வசித்து வருபவர் விஜயகுமார். இவர் மீது பல வழக்குகள் உள்ளது. சமீபத்தில் குற்ற வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சிறையில் இருந்த சென்னையின் பிரபல ரவுடி ஓட்டேரி கார்த்தியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரும் சிறையில் இருந்து வந்ததும், இரு தினங்களுக்கு முன்பு ஓட்டேரி கார்த்தி விஜயகுமாரை சந்தித்து அவரிடமிருந்து நாட்டு வெடிகுண்டுகளை வாங்குவதற்கு அம்பத்தூர் ஒரகடம் பகுதிக்கு வந்தார். இதனிடையே, விஜயகுமார் வீட்டின் மாடியில் உருண்டை வடிவில் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்துக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாரபாத விதமாக திடீரென தீப்பொறி எழும்பி நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் ஓட்டேரி கார்த்திக்கின் 2 கைகளும் சிதறி துண்டானது. மேலும் அவருக்கு முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனையில் முறையான சிகிச்சை மேற்கொள்ள முடியவில்லை எனக்கூறி 2 நாட்களுக்கு பிறகு அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அப்போது அங்கு விசாரணை மேற்கொண்ட கீழ்ப்பாக்கம் போலீசார் அம்பத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து 2 நாட்களுக்கு பிறகு சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டனர். இந்த தகவல் கீழ்பாக்கம் போலீசார் அம்பத்தூர் போலீசாருக்கு தெரிவித்த நிலையில் இதற்கு முன்பதாகவே விபத்து ஏற்பட்ட பகுதியில் பலத்த சத்தம் ஏற்பட்டு ஏதோ நடந்து இருப்பதாக அந்த பகுதி இருக்கக்கூடிய சிலர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலருக்கு ரகசிய தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அம்பத்தூர் போலீசார் தற்போது செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர் மணிவண்ணன் தலைமையில் முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க ஆவடி மாநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பல குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ள பிரபல ரவுடி ஓட்டேரி கார்த்திக் யாரையாவது கொலை செய்ய நாட்டு வெடிகுண்டு தயாரித்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முக்கிய நிகழ்வாக 2 தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இச்சம்பவம் மருத்துவமனை தகவலை அடுத்து காவல் துறையினருக்கு தெரியவந்ததாகவும், இதனை ரகசிய தகவலாக அந்த பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள் தெரிவித்தும் கண்டும் காணாமல் இருந்த அம்பத்தூர் போலீசார் நடவடிக்கை எடுக்காதது ஏன் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விபத்து ஏற்பட்ட அம்பத்தூர் பகுதியில் தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வெடி தயாரிக்கும்போது இந்த விபத்து எப்படி ஏற்பட்டிருக்கிறது? என ஆராய்ந்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் : கன்னியப்பன் - சென்னை

First published:

Tags: Chennai, Crime News, Local News