Home /News /chennai /

‘நான்தான் ரவுடி’ - பட்டாகத்தியை காட்டி வசூல் வேட்டையில் ஈடுபட்ட இளைஞர் கைது...

‘நான்தான் ரவுடி’ - பட்டாகத்தியை காட்டி வசூல் வேட்டையில் ஈடுபட்ட இளைஞர் கைது...

கைது செய்யப்பட்ட மோகன்ராஜ்

கைது செய்யப்பட்ட மோகன்ராஜ்

சென்னையை அடுத்த பம்மல் பகுதியில் தான் ரவுடி என்று கூறி, பட்டா கத்தியை காட்டி மிரட்டி கடைகளில் வசூல் வேட்டையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் ஈஸ்வர நகர் 10வது தெருவை சேர்ந்தவர் மோகன் ராஜ் (வயது 24) இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக பம்மல் அனகாபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கடைகளில் கத்தியைக் காட்டி மாமுல் வாங்குவதைத் வழக்கமாக கொண்டுள்ளனர்.

    நடந்து செல்பவர்களிடம் வழிப்பறி செய்தது, கடைகளில் கத்தி காட்டி பணம் கேட்டது மற்றும் ஒரு கொலை சம்பவத்தில் ஈடுபட்டது என மோகன் ராஜ் மீது வழக்குகள் உள்ளன. கொலை வழக்கில் சிறைக்கு சென்று வந்த இவர், கடைக்கு சென்று கடைக்காரரிடம் மாமுல் கேட்டதும் அவர்கள் மாமும் கொடுத்து விடுவார்கள் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், பம்மல் பகுதியில் இயங்கி வரும் மளிகை கடை ஒன்றில், வழக்கம் போல் கத்தியை காட்டி மாமுல் கேட்ட போது, அந்த கடைக்காரர் மாமூல் தர மறுத்துள்ளார். மேலும் இது குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

    இந்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் அந்த நபரை பிடிக்க முயன்ற போது அவர் வைத்திருந்த பட்டா கத்தியை காட்டி போலீசாரை மிரட்டி, அங்கிருந்து தப்பியோட முயற்சித்துள்ளார். அப்போது பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மோகன்ராஜை மடக்கி பிடித்து வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச் செல்லும்போது வாகனத்திலிருந்து கீழே குதித்து தப்பி ஓடியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அப்போது அங்கிருந்த சிறு பள்ளத்தில் அவர் விழுந்ததால் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் அவரைப் பிடித்து குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    Must Read : மாமியார் மருமகள் சண்டை தீரும்.. தங்கம் இரட்டிப்பாகும் - மாந்திரீகம் செய்வதாக கூறி நகைகளுடன் ஓட்டம் பிடித்த ஆசாமி

    அப்போது போதைக்காக பணம் கேட்டதாக ஒப்புக்கொண்டார்.
    அதன் பின்னர் மோகன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    செய்தியாளர் - சுரேஷ்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Chennai, Crime News, Money

    அடுத்த செய்தி