மெரினா கடற்கரையை வானத்தில் இருந்தபடி பார்க்கும் வகையில் ரோப் கார் திட்டம் கொண்டுவர சாத்தியக்கூறுகளை ஆராய முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னையை அழகு படுத்தும் பணிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சென்னை அழகு படுத்த மாமன்ற உறுப்பினர்களிடம் யோசனைகள் கேட்கப்பட்டது.
அந்த வகையில் பல்வேறு யோசனைகள் முன்மொழியப்பட்டது அதில் முக்கியமான ஒன்றாக, சென்னையின் முக்கிய சுற்றுலா தளங்கள் ஒன்றாக இருக்கக்கூடிய மெரினா கடற்கரையை வானத்தில் இருந்தபடி பார்க்கும் வகையில் ரோப் கார் திட்டம் கொண்டுவர மாமன்ற உறுப்பினர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
அந்தத் திட்டத்தின் படி நேப்பியர் பாலத்தில் இருந்து நம்ம சென்னை செல்பி பாயிண்ட் வரை மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல் கட்டமாக ரோப் கார் திட்டத்தை கொண்டு வர யோசனை முன்மொழியப்பட்டிருக்கிறது. இந்த யோசனை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் சாத்திய கூறுகளை ஆராய்ந்து திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்று கண்டறிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
முதல் கட்டமாக ரோப் கார் திட்டம் கொண்டுவரப்பட்டதற்கு பிறகாக அடையார் ஆற்றங்கரையை ஒட்டியபடி சென்னையின் பாரம்பரிய கட்டிடங்களை ஒட்டியவாரும், நேப்பியர் பாலத்தில் இருந்து ராயபுரம் ரயில் நிலையம் வரையிலும் ரோப் கார் திட்டத்தை செயல்படுத்தவும் சாத்தியக்கூறுகளை ஆராய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ரோப் கார் கொண்டு வர ஏற்கனவே சுதேசி தர்ஷன் என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் பொருட்செலவு அதிகம் என்பதாலும் சுற்றுலா பயணிகளை அதிகமாக ஈர்க்காது என்பதாலும் திட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Marina Beach