சிங்காரச் சென்னை 2.O மற்றும் TURIF என்ற இரண்டு திட்டங்களில் சென்னை மாநகராட்சியில் சாலை அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. குறிப்பாக கோடம்பாக்கம், கே.கே நகர், நுங்கம்பாக்கம், வளசரவாக்கம், சேத்துப்பட்டு, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலை அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திட்டங்களில் 319 சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
இவற்றின் மதிப்பு 28.9 கோடியாகும், 22.9 கோடி மதிப்பீட்டில் மற்றொரு திட்டத்தில் 249 சாலைகளில், சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பெருங்குடி மண்டலத்துக்கு உட்பட்ட 117 இடங்களில் 9.3 கோடி மதிப்பீட்டில் சாலை போடப்படுகிறது. இந்த திட்டங்களில் குறிப்பாக வடசென்னை பகுதியில் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க; வெளியானது மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் - ரிசல்ட் லிங்க் உள்ளே!
மொத்தம் உள்ள 319 பகுதிகளில் மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகர் ஆகிய மண்டலங்களில் மட்டும் 200 பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலை அமைக்கும் பணிகள் அனைத்தும் பெரும்பாலாக இரவு நேரத்தில் அமைக்கப்படுகிறது. சாலைகள் உரிய தரத்தில் அமைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai