கால் டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் சொந்த வாகனங்களை இயக்கி வந்த ஓட்டுநர்களை ஒருங்கிணைத்து, டி டாக்சி என்ற புதிய செல்போன் செயலி சேவை சென்னையில் கடந்த 2019ம் ஆண்டு டி டாக்ஸி கூட்டுறவு சேவை சங்கம் என்ற பெயரில் துவங்க பட்டது. இந்த தொழில் கூட்டுறவு சேவை சங்கம் திருவள்ளூர் மாவட்டம் அரண்வாயலில் வசிக்கும் பாலாஜி என்பவரின் முயற்சியில் கடந்த அதிமுக ஆட்சியில் ஓலா போன்ற பெரிய பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு போட்டியாக துவங்கப்பட்டது.
2019ல் பெரிய பன்னாட்டு நிறுவனங்களால் கொரோனா சவால்களுக்கு மத்தியில் சேவையை அளிக்க முடியாத சூழலில் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் சாதாரணமானவர்களால் முதலீடு செய்யப்பட்டு பெரும் சவால்களுக்கு மத்தியில் துவங்கியது இந்நிறுவனம், சொந்த வாகனங்களை வைத்துள்ள ஓட்டுநர்கள் மற்றும் வாகனமில்லா ஓட்டுநர்களை ஒன்றிணைந்து டி டாக்ஸி என்ற செயலியை சென்னையில் தொடங்கி படிப்படியாக அதனை மற்ற இடங்களுக்கு விரிவுபடுத்த முயற்சித்தனர்.
ஓட்டுநர்கள் ரூபாய் நூறு பதிவு கட்டணம் மற்றும் மாதந்தோறும் ரூபாய் 3,000 செலுத்துதல், மற்றும் ரூபாய் 100 செலுத்தி வருவாயில் 10 சதவீதம் செலுத்த வேண்டும் என்ற இரண்டு வகையான திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. டி டாக்ஸி செல்போன் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொண்டு பயன்படுத்தலாம். இந்தக் கூட்டுறவு சங்க செயல்பாடுகள் தமிழக அரசின் தொழில் வணிக துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் என்றும் அப்போது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அதிகாரிகளின் முறையான ஒத்துழைப்பு இல்லாததால் தற்போது இந்த டி டாக்ஸி தொழில் முடங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆரம்ப காலத்தில் போதிய விளம்பரயுக்தி இன்மை, அதிகாரிகளின் அலட்சியம், செல்போன் செயலி இருந்தும் இதனை மக்களிடம் முழுமையாக கொண்டு சேர்க்க முடியாத நிலை இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த கூட்டுறவு சங்க செயல்பாடுகள் தமிழக அரசின் தொழில் வணிக துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் என்று அறிவித்திருந்த போதும், அரசு நிர்ணயத்த படி ஆட்டோவுக்கு குறைந்தபட்சமாக 1.8 கிலோமீட்டர் தூரத்திற்கு 25 ரூபாய் கட்டணமாகவும், இது தவிர காத்திருப்பு கட்டணமாக நிமிடத்திற்கு 30 காசுகள் வசூலிப்பது என்றும், மினி காருக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய்30 எனவும் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூபாய் 1 எனவும் வசூலித்து மக்கள் சேவையாற்றிட அப்போது
முடிவு செய்திருந்தனர்.
அலுவலக நேரத்துக்கு என கூடுதல் கட்டணம் வசூலிக்க மாட்டோம் என்றும் அறிவித்தனர். இது, மக்களிடையே வரவேற்பையும் பெறத் துவங்கியிருந்தது. பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் சேவை தொடங்கிய போது, குறைந்த கட்டணத்தில் அதிக சேவை என தொடங்கினார்கள். மக்களுக்கு தற்போது அலுவலக நேரத்தில் ஒரு கட்டணமும் மற்ற நேரங்களில் ஒரு வகையான கட்டணத்தையும் வசூலிக்கிறார்கள். மேலும் சரியான சேவையை தற்போது வழங்குவதில்லை என்று பெரும்பாலான பொதுமக்களும் ஓட்டுநர்களும் தெரிவிக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் கூடுதல் கட்டணம் மக்களிடம் வசூலிப்பதை தடுக்கும் என்ற உயரிய நோக்கத்தில் உருவாக்கப்பட்ட டி டாக்ஸி, பெரிய எதிர்பார்ப்பை எட்டவில்லை. சமீபத்தில் கூட, கேரளாவில் அரசே ஓட்டுநர்களை ஊக்கப்படுத்தி டாக்ஸி சேவையை அறிமுகம் செய்துள்ளது. அது அம்மாநில மக்களிடையே வரவேற்பையும் பெற்றுள்ளது.
Must Read : தனியார் பால் விலை உயர்வு.. ஆவின் பால் விற்பனை அதிகரிப்பு
தமிழகத்தில் தொழில் வணிகத் துறையின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு சங்க அதிகாரிகள் நியமனத்தோடு 2019ம் ஆண்டு தொடங்கிய டி டாக்ஸி சேவை விளம்பரம் இன்றியும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தாலும் முடங்கிப் போயுள்ளது. மீண்டும் இந்த சேவையை தமிழக அரசு விளம்பரம் செய்து, இயக்கி ஏழை ஓட்டுநர்களின் வாழ்க்கையையும் பொதுமக்களுக்கு தரமான சேவையையும் அளித்திடவேண்டும் என்று டி டாக்ஸி சேவையை ஆரம்பத்தில் முன் நின்று துவங்கிய அதன் தலைவர் பாலாஜி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.