முகப்பு /செய்தி /சென்னை / கோடம்பாக்கம் பாலத்தில் மெகா சைஸ் பள்ளம் - ஆட்டோவின் பின்புறம் எழுதி டிரைவர் கோரிக்கை

கோடம்பாக்கம் பாலத்தில் மெகா சைஸ் பள்ளம் - ஆட்டோவின் பின்புறம் எழுதி டிரைவர் கோரிக்கை

ஆட்டோவில் எழுதி கோரிக்கை

ஆட்டோவில் எழுதி கோரிக்கை

கோடம்பாக்கம் மேம்பாலத்தில் உள்ள மெகா சைஸ் பள்ளங்களை விரைவில் சரிசெய்ய வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவின் பின்புறம் எழுதி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்து கவனம் ஈர்த்துள்ளார்.

  • Last Updated :
  • Chennai [Madras], India

கோடம்பாக்கம் மேம்பாலத்தில் உள்ள மெகா சைஸ் பள்ளங்களை விரைவில் சரிசெய்ய வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவின் பின்புறம் எழுதி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்து கவனம் ஈர்த்துள்ளார்.

சென்னையில் கடந்த ஒரு மாதமாக பெரும்பாலான இடங்களில் மாநகராட்சி, மெட்ரோ ரயில், மின் துறை சார்பில் சாலைகள் தோண்டப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இந்த சாலைகளில் அகலம் குறுகி, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவின் பின்புறம், ‘சாலைகளில் உள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும்’ என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Read More : “மதங்களை பற்றி பேசுவது ஸ்டைல் ஆகிவிட்டது; சினிமாவுக்கு அது தேவையில்லை” - ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேச்சு

top videos

    இது தொடர்பாக அவர் தனது ஆட்டோவின் பின்புறம், "மாநகராட்சி அதிகாரிகளே! கோடம்பாக்கம் மேம்பாலத்தில் 2, 3 மெகா சைஸ் பள்ளங்கள் உள்ளன. வாகன ஓட்டுனநர்கள் உயிர் பலி எற்படுவதற்கு முன்னே சரி செய்திடுக" என்று எழுதியுள்ளார். இந்த சம்பவம் பொதுமக்களிடையே கவனம் பெற்றுள்ளது.

    First published:

    Tags: Chennai, Tamil Nadu