Home /News /chennai /

சென்னையில் விநாயகர் சிலைகள் இன்று கரைப்பு... பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன!

சென்னையில் விநாயகர் சிலைகள் இன்று கரைப்பு... பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன!

சிலை கரைப்பு

சிலை கரைப்பு

சிலை கரைக்கும் இடங்கள், ஐந்து கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் 32 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்வை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எந்தவித சிக்கல்களும் இல்லாமல் சிலைகளைக் கரைக்க சில கட்டுப்பாடுகளையும், நடைமுறை விதிகளையும் வெளியிட்டுள்ளனர்.

சென்னை, ஆவடி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் 2, 554 சிலைகள் வைத்து விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்தப்பட்டது. இந்த சிலைகளை கரைப்பதற்கு எடுத்துச் செல்லும் போது, மதவாத வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையிலோ பிற மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ முழக்கம் செய்யக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை அனுமதி வழங்கிய பாதைகளில் மட்டுமே செல்ல வேண்டும், ஊர்வலத்தின் போது பட்டாசுகள் வெடிக்க கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. பாலவாக்கம், பட்டினம்பாக்கம், ஸ்ரீனிவாசபுரம், காசிமேடு, திருவொற்றியூர் கடற்கரைகளில் மட்டுமே சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது அசம்பாவிதங்களை தடுக்க 24,450 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்படுவர். சிலைகள் கரைக்கும் இடங்களில் காவல் கட்டுப்பாட்டு அறைகள், உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உயர் கோபுரங்களில் இருந்தபடி கண்காணிப்பு பணிகளில் போலீசார் ஈடுப்படுத்தபடுவர்.

தமிழகம், மத்திய பிரதேசத்தில் கிசான் கிரெடிட் கார்டை டிஜிட்டல் மயமாக்கும் ரிசர்வ் வங்கி!

சிலை கரைக்கும் இடங்கள், ஐந்து கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் 32 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். மேலும் சிலை கரைக்கும் ஒவ்வொரு இடத்திலும் ஒரு இணை ஆணையர் தலைமையில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

இன்று நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பிரச்னை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Chennai, Vinayagar Chathurthi | விநாயகர் சதுர்த்தி

அடுத்த செய்தி