ஹோம் /நியூஸ் /சென்னை /

“ராமர் என்ன கதாபாத்திரமா? அவர் அவதாரபுருஷர்..” சட்டப்பேரவையில் பொள்ளாச்சி ஜெயராமன் ஆவேசம்!

“ராமர் என்ன கதாபாத்திரமா? அவர் அவதாரபுருஷர்..” சட்டப்பேரவையில் பொள்ளாச்சி ஜெயராமன் ஆவேசம்!

ராமர், பொள்ளாச்சி ஜெயராமன்

ராமர், பொள்ளாச்சி ஜெயராமன்

சேது சமுத்திர திட்டம் ரூ. 2427 கோடி செலவில் தொடங்கப்பட்டது இதுவரை எவ்வளவு செலவு செய்யப்பட்டிருக்கிறது என்பதை ஆராய வேண்டும் - ஜெயராமன்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

100 கோடி மக்கள் பின்பற்றும் மதத்தின் நாயகர் ராமர், அவர் ஒரு அவதார புருஷர், அவரை கற்பனை பாத்திரம் என உறுப்பினர்கள் சொன்னதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் பேசியுள்ளார்.

சேதுசமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி இன்று முதலமைச்சர் சட்டபேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். சேது சமுத்திரத் திட்ட தீர்மானம் மீது பேசிய அதிமுக உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், மக்களுக்கு பயனளிக்கும் எந்த திட்டமாக இருந்தாலும் அதிமுக ஆதரிக்கும் என பேசினார்.

இந்த தீர்மானம் மீது அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார். அப்போது பேசிய அவர் ராமர் கதாபாத்திரம் கற்பனையானது என உறுப்பினர்கள் பேசியது வேதனை அளிக்கிறது எனவும், 100 கோடி மக்கள் பின்பற்றும் மதத்தின் நாயகர் ராமர், அவர் ஒரு அவதார புருஷர், அவரை கற்பனை பாத்திரம் என உறுப்பினர்கள் சொன்னதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என பேசினார்.

சேது சமுத்திர திட்டம் ரூ. 2427 கோடி செலவில் தொடங்கப்பட்டது இதுவரை இந்த திட்டத்திற்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டிருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனவும், இந்த திட்டத்தினால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. எனவே மீனவ சங்க பிரதிநிதிகளை அழைத்து அவர்களுடைய கருத்துகளை கேட்க வேண்டும் என பேசினார்.

அப்போது குறிக்கிட்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இந்த திட்டம் அறிவிக்கப்பட்டவுடன் தேவையான அனைத்து ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டது, மீனவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் உட்பட அனைவரின் கருத்துகளையும் கேட்கப்பட்டு ,ஆய்வு அறிக்கைகள் பெறப்பட்ட பிறகு தான் அடிக்கல் நாட்டப்பட்டதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக தொடங்கப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே இந்த திட்டத்தின் சாதக பாதகங்களை முழுமையாக ஆய்வு செய்து தற்போதுள்ள சூழலை ஆராய்ந்து நிறைவேற்ற வேண்டும் எனவும், மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய எந்த திட்டமாக இருந்தாலும் அதிமுக ஆதரிக்கும் என பேசினார்.

First published:

Tags: CM MK Stalin, Pollachi Jeyaraman, Sethusamudram Project, TN Assembly