ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் 34 இடங்களில் ரெடிமேட் மழைநீர் கால்வாய்..!

சென்னையில் 34 இடங்களில் ரெடிமேட் மழைநீர் கால்வாய்..!

ரெடிமேட் கால்வாய்

ரெடிமேட் கால்வாய்

ரெடிமேட் முறையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai | Tamil Nadu

சென்னை மாநகராட்சியில் 34 இடங்களில் ரெடிமேட் கால்வாய்கள் பயன்படுத்தி, மழை நீர் வடிகால்களை இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

சென்னை மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை  தொடங்கு முன் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவாக பணிகளை முடிக்க ப்ரீசெட் (precest) எனப்படும் ரெடிமேட் கட்டுமானத்தை பயன்படுத்தி கால்வாய்களை அமைக்கும் பணிகளில் தற்போது சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.

ரெடிமேட் முறையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது. அதாவது, ஏற்கெனவே தயார் நிலையில் இருக்கும் கட்டுமானத்தைக் கொண்டு சாலையின் குறுக்கே வடிகால் அமைக்கப்பபட்டு, கால்வாய்களை இணைக்க பணி நடந்து வருகிறது.

Also read | இந்த 18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு இடியுடன் மழை.. வானிலை மையம் தகவல்

சென்னையில் 34 பெரிய சாலைகளில் இதுபோல் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆர்.கே.சாலை, சென்ட்ரல் ரயில் நிலையம், எஸ்எசி போஸ் சாலை, பிரகாசம் சாலை, நேதாஜி சாலை, கல்லூரிச் சாலை,  திருவல்லக்கேனி நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் இதுபோன்று ரெடிமேட் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Published by:Anupriyam K
First published:

Tags: Chennai