ஹோம் /நியூஸ் /சென்னை /

மழைநீர் தேங்கினால் அனைவரும் சஸ்பெண்ட் - சென்னையில் ஆய்வுசெய்த தலைமை செயலர் இறையன்பு எச்சரிக்கை!

மழைநீர் தேங்கினால் அனைவரும் சஸ்பெண்ட் - சென்னையில் ஆய்வுசெய்த தலைமை செயலர் இறையன்பு எச்சரிக்கை!

தலைமை செயலர் இறையன்பு எச்சரிக்கை

தலைமை செயலர் இறையன்பு எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சென்னையில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் முடிந்த பிறகும் மழை நீர் தேங்கினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு எச்சரித்துள்ளார்.

  வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  இந்த நிலையில், சென்னையின் புறநகர்ப் பகுதிகளான குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  இந்த பணிகளை அரசு அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்கவும் சரிவர செய்யவும் பல தரப்பிலிருந்தும் அறிவுறைகள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் இந்த பணிகளால் சில சாலை வழிகள் மாற்றி விடப்படுவதாலும் பயண நேரத்தில் தாமதம் ஏற்படுவடுவதாலும் விரைந்து முடிக்கக்கோரி பொதுமக்களிடமிருந்தும் கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.

  Read More : காதலி கொடுத்த ஜூஸை குடித்த கல்லூரி மாணவன் உயிரிழப்பு... கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்.

  இந்நிலையில் மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் மழை நீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலர் இறையன்பு அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது இந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

  மேலும் மாங்காட்டில் நடந்த ஆய்வின் போது இவ்வளவு பணிகள் செய்தும் மழைநீர் தேங்கினால் அனைவரும் பணி இடைநீக்கம் செய்யப்படுவீர்கள் என அதிகாரிகளிடம் எச்சரிக்கை விடுத்தார். இதனால், அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Chennai, Iraianbu IAS