Home /News /chennai /

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

மழை

மழை

நகரின் பல்வேறு பகுதிகளில் இரவு முதல் அதிகாலை வரையில் சாரல் மழை பெய்தது.நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தியாகராய நகர், கிண்டி போன்ற பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.

    சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் லேசான மழை பெய்து வருகிறது.

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளில் இரவு முதல் அதிகாலை வரையில் சாரல் மழை பெய்தது. குறிப்பாக தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

    நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தியாகராய நகர், கிண்டி போன்ற பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. தாம்பரம், கிழக்கு கடற்கரை சாலை, பல்லாவரத்திலும் மழை நீடித்தது.  ஒருசில பகுதிகளில் காலையில் விட்டுவிட்டு லேசான மழை பெய்து வருகிறது.

    இதே போன்று, புறநகர் பகுதியான ஆவடி, அம்பத்தூர், முகப்பேர், கொரட்டூர், பாடி, அயப்பாக்கம், திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூரிலும் மழை பெய்தது. திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு 7 மணி முதல் கனமழை கொட்டி தீர்த்தது.

    இதையும் படிங்க: தமிழகத்துக்கு ரெட் அலர்ட்.. 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    இதன் காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டதை அடுத்து, நகரம் முழுவதும் இருளில் மூழ்கியது. மேலும், மா.பொ.சி.சாலை, மார்க்கெட் பகுதி, சென்னை பைபாஸ் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. காந்திரோடு பகுதியில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து வீடுகளுக்கு முன்பு தேங்கி நின்றதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Chennai Rain, Rain Update

    அடுத்த செய்தி