சென்னை -
திருவள்ளூர் மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமான புழல் ஏரியானது 18.21 கி.மீ., சுற்றளவுடைய இந்த ஏரியை சுற்றி செங்குன்றம், புழல், சூரப்பட்டு, கள்ளிக்குப்பம், ஒரகடம், அம்பத்துார், திருமுல்லைவாயல், வெள்ளானுார், ஆரிக்கம்பேடு, காட்டூர், பொத்துார், பம்மதுகுளம், நல்லுார் என, 50 க்கும் மேற்பட்ட நகர, கிராமங்கள் ஏரியை சுற்றியுள்ளன.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் இந்த புழல் ஏரியில், 21.02 அடி உயரத்திற்கு, 3.3 டி.எம்.சி. நீர் இருப்பு வைக்க முடியும். ஆனால்,கடந்த 10 ஆண்டாக சூரப்பட்டு, கள்ளிக்குப்பம், புதுார், ஒரகடம், அம்பத்துார், திருமுல்லைவாயல் உள்ளிட்ட, சென்னை மாநகராட்சி மற்றும் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை ஒட்டி, புழல் ஏரிக்குள், பல ஏக்கர் பரப்பளவிற்கு, தனியார் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.
அவற்றில், குடியிருப்பு, சிறு தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு வகையான கட்டடங்கள், நிரந்தரமாகி விட்டன. அவற்றுக்கு வருவாய்த்துறை, மாநகராட்சி மற்றும் மின் வாரியத்தின் மூலம், தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில் .குறிப்பாக, சென்னை மாநகராட்சி, அம்பத்துார் மண்டலம், 79 வது வார்டு மற்றும் ஆவடி மாநகராட்சி பகுதிகளை இணைக்கும், சரஸ்வதி நகரை ஒட்டி, புழல் ஏரி நீர்பிடிப்பு பகுதியில் மட்டும், 200 க்கும் மேற்பட்ட, ஆக்கிரமிப்பு வீடு உள்ளிட்ட கட்டடங்கள் இருப்பதாக, திருவள்ளூர் மாவட்ட நீர்வளத் துறையின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
Read More : 'தனித் தமிழ்நாடு' வாய்ப்பே இல்லை: பொன்னார் திட்டவட்டம்
அவற்றுக்கு, மாநில மின் வாரியத்தின் வாயிலாக, 200 க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் மின்மாற்றிகளுக்கான, மின் இணைப்புகளும் புதிதாக வழங்கப்பட்டுள்ளது. சில இடங்களில், மின் கம்பங்களில், கொக்கி அடித்து மின் திருட்டும் நடக்கிறது. மேலும், சென்னை மாநகராட்சி மூலம், 500 தெரு விளக்கு கம்பங்களும் அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளன.

புழல்
அம்பத்துார் அடுத்த கொரட்டூர் ஏரியிலும், தனியார் ஆக்கிரமிப்பில் உருவான தக்சன் நகரிலும், மின் வாரியம் வாயிலாக இணைப்பும், மாநகராட்சி மின் வாரிய பிரிவு மூலம், தெரு விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. தோல் நோய்கள் அதே போன்று, ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயல், தென்றல் நகர், வெங்கடாச்சலம் நகரை ஒட்டியும், புழல் ஏரியில் ஆக்கிரமிப்பு வீடுகள் உருவாகி உள்ளன.
புழல் ஏரி, கொரட்டூர் ஏரிகளில், அரசுத்துறை அதிகாரிகளின் ஆசியோடு உருவான ஆக்கிரமிப்பு வீடு உள்ளிட்ட கட்டடங்களுக்கான கழிவு நீர் கால்வாய், குப்பை அகற்றும் வசதி இல்லை என்பதால், அவை அனைத்தும், புழல் ஏரிக்குள் குவிக்கப்படுகின்றன. அதனால், மேற்கண்ட பகுதியில், புழல் ஏரி நீர் அடர்த்தியான திடக்கழிவுநீராக மாறி விட்டது. அங்கு வசிப்போருக்கும், புழல் ஏரியில் இருந்து பெறப்படும் குடிநீரை பயன்படுத்துவோரும், சுகாதார சீர்கேடுக்கு ஆளாகின்றனர். சிறுவர்கள் அரிப்பு, சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கு ஆளாகின்றனர்.
துர்நாற்றம் காரணமாக, இரவில், மூச்சுத்திணறல் அதிகரிப்பதாக, சுற்றுவட்டாரங்களில் வசிப்போர் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில், மேற்கண்ட பகுதிகளில், அவ்வப்போது, ஏராளமான மீன்களும் செத்து மிதப்பது தொடர்கிறது.இந்த பிரச்னை குறித்து, சமூக ஆர்வலர்களின் புகார் காரணமாக, நீர்வளம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தாலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற, இதுவரை ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், நாளுக்கு நாள் புதிய ஆக்கிரமிப்புகள், தடையின்றி உருவாகின்றன.
இனியும், அரசுத்துறை அதிகாரிகள், புழல் மற்றும் கொரட்டூர் ஏரிகளை மீட்பதில் அலட்சியம் காட்டினால், சென்னையின் முக்கியமான குடிநீர் ஆதாரமான மேற்கண்ட ஏரிகள், அனைத்து வகையான கழிவுகளால், சென்னையை நோய் தொற்று மண்டலமாக மாற்றிவிடும் ஆபத்து உள்ளது என, நீர்நிலை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.
செய்தியாளர்: கன்னியப்பன், சென்னை
உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.