முகப்பு /செய்தி /சென்னை / இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நபர்.. 3 ஆண்டு தண்டனையை 10 மாதமாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நபர்.. 3 ஆண்டு தண்டனையை 10 மாதமாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

இந்தியாவில் மனுதரார் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லை என்றும் ஆதார் உள்ளிட்ட போலி ஆவணங்கள் தயாரித்தற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் மற்ற குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டதை போன்று குறைந்தபட்ச தண்டனையே வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியிருந்த பங்களாதேஷை சேர்ந்த நபருக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டு சிறை தண்டனையை 10 மாதங்களாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வங்கதேசத்தை சேர்ந்த முகமது மொனின்வார் ஹொசைன் உள்ளிட்ட சிலர் மீது ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை போலியாக  தயாரித்ததாகவும், உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் தங்கி இருந்ததாகவும் திருப்பூர் காவல்துறை கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றம்,  முகமது மொனின்வார் ஹொசைனுக்கு  3 ஆண்டு சிறை தண்டனை மற்றும்  ரூ,10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. மற்ற குற்றவாளிகளுக்கு 10 மாதம் சிறை தண்டனையும் 1000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கபட்டது.

மூன்றாண்டு சிறை தண்டனை தீர்ப்பை ரத்து செய்ய கோரி  மொனின்வார் ஹொசைன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதரார் தரப்பில், வாழ்வாதாரத்திற்காக  புலம் பெயர் தொழிலாளராக மட்டுமே இவர் இந்திய வந்துள்தாகவும் இவரை அகதிகள் அல்லது வியாபார நோக்கோடு ஆட்கடத்தலில்  பாதிக்கப்பட்டவராக மட்டுமே கருத வேண்டும் என வாதிடப்பட்டது.

மேலும் இந்தியாவில் மனுதாரர் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லை என்றும் ஆதார் உள்ளிட்ட போலி ஆவணங்கள் தயாரித்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் மற்ற குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டதை போன்று குறைந்தபட்ச தண்டனையே வழங்க வேண்டும் எனவும்  வாதிடப்பட்டது.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, போலி ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டுகள் மனுதாரருக்கு எதிராக நிரூபிக்கபடவில்லை என்றாலும்  விசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் தங்கியிருந்த குற்றச்சாட்டு நிரூபிக்கபட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறை தண்டனை 10 மாதமாக குறைத்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

First published:

Tags: Bangladesh, Madras High court