ஹோம் /நியூஸ் /சென்னை /

களைகட்டும் ஆயுத பூஜை - கோயம்பேடு பூ மார்க்கெட்டில் குவியும் மக்கள்..!

களைகட்டும் ஆயுத பூஜை - கோயம்பேடு பூ மார்க்கெட்டில் குவியும் மக்கள்..!

கோயம்பேடு மலர்சந்தை

கோயம்பேடு மலர்சந்தை

பண்டிகை தினத்தையொட்டி, ஏராளமான பொதுமக்கள் பூஜைகள் மேற்கொள்ள ஆர்வமாக சென்று பூக்களை வாங்கி செல்கின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai | Chennai [Madras] | Tamil Nadu

  கோயம்பேடு மலர் அங்காடியில் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

  தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இருந்து சென்னை கோயம்பேடு மலர் அங்காடிக்கு டன் கணக்கில் பூக்கள் சிறப்பு விற்பனைக்கு வந்துள்ளன. குறிப்பாக 10 லாரிகள் மூலம், 48 டன் லாரிகளில் ரோஸ் மற்றும் சாமந்தி பூக்கள்   ஓசூர், கிருஷ்ணகிரி, சேலம், கடப்பா, குப்பம், தருமபுரி,பொம்முடி மற்றும் ராயகோட்டையிலிருந்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வந்துள்ளது.

  அதேபோல் மல்லிகை பூக்கள் திருவள்ளூர், மாவட்டத்திலுமிருந்து சற்று குறைவாகவே வந்துள்ளது. 18 மினி வேன் மூலம் 9 டன் அளவிற்கு மல்லி, முல்லை வருகை தந்துள்ளது.

  பூக்களின் விலை நிலவரம் (கிலோவுக்கு)

  1. சாமந்தி பூ - ரூ. 200 முதல் ரூ. 280

  2. சாக்லேட் ரோஸ் - ரூ. 180 முதல் ரூ. 220

  3. பன்னீர் ரோஸ் - ரூ 100 முதல் ரூ.120

  4. மல்லி-  ரூ.750 முதல் ரூ.900

  5. முல்லை -ரூ. 600 முதல் ரூ. 700

  6. ஜாதி மல்லி - ரூ. 450 முதல் ரூ. 500

  7. சம்பங்கி - ரூ. 160 முதல் ரூ. 200

  8. அரளி - ரூ. 250 முதல் ரூ. 300

  9. மருகு  - 1 கட்டு ரூ.51

  10. தவணம் மரிக்கொழுந்து - 1 கட்டு ரூ. 7

  11. தாமரை 1 பூ - ரூ. 8முதல் ரூ. 12

  12. தாழம்பூ 1 பூ - ரூ. 300 முதல் ரூ. 400

  பண்டிகை தினத்தையொட்டி, ஏராளமான பொதுமக்கள் பூஜைகள் மேற்கொள்ள ஆர்வமாக சென்று பூக்களை வாங்கி செல்கின்றனர்.

  செய்தியாளர்: கன்னியப்பன், சென்னை.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Ayudha poojai, Koyambedu, Koyambedu Market