முகப்பு /செய்தி /சென்னை / உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை எதிர்த்து விக்ரம ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்...

உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை எதிர்த்து விக்ரம ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்...

உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை நீக்கக்கோரி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் சென்னையில் நடந்தது.

உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை நீக்கக்கோரி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் சென்னையில் நடந்தது.

உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை நீக்கக்கோரி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் சென்னையில் நடந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

உணவுப் பொருட்கள் மீதான ஜி எஸ் டி வரி உயர்வை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக அதன் தலைவர் விக்ரம ராஜா தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுவதிலுமிருந்து வந்திருந்த 1000 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது கூட்டத்தில், பாக்கெட்டில் விற்கப்படும் அரிசி, தயிர் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மீது 5% ஜி எஸ் டி வரி விதித்திருப்பது கண்டிக்கதக்கது என அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். அரிசி இலவசமாக விற்கப்படும் நாட்டில் ஜி எஸ் டி விதிப்பது நியாயமா என கேள்வி எழுப்பினர். எனவே மத்திய அரசு உணவு பொருட்கள் மீதான ஜி எஸ் டி வரியை உடனே நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மேலும் மாநில அரசு வேளாண் வெளிச்சந்தை வரி விதிப்பு முறையை ரத்து செய்ய வேண்டும் என கோரினர். ஒரு பொருள் எங்கு விளைவிக்கப்படுகிறதோ அந்த இடத்தில் அந்த பொருளுக்கு வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்பு முறை ஊழலுக்கு வித்திடுகிறது என கூறி அதை ரத்து செய்ய கோரினர்.

Also see... கள்ளக்குறிச்சி மாணவி உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து..

இந்த போராட்டத்துக்கு விவசாய சங்கத் தலைவர் பி ஆர் பாண்டியன் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார்.

மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் வணிகர் சங்கங்களின் இந்திய அளவிலான கூட்டம் நடைபெறவிருப்பதாகவும், இந்த போராட்டம் தற்போது ஓயாது எனவும் மேடையில் பேசிய வணிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

First published:

Tags: Chennai, Food, GST, Valluvarkottam