காமெடி நடிகர் யோகி பாபு நடிப்பில் "ஷூ(shoe)" என்ற திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் 14ஆம் தேதி வெளியாகியது. இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கார்த்திக் என்பவர் Netco studios என்ற பெயரில் தயாரித்துள்ளார்.இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஏடிஎம் ப்ரொடக்ஷன் கம்பெனி( ATM Production Company) நடத்தி வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மதுராஜ்(39) என்பவர் அதன் விநியோக உரிமையை வாங்கியுள்ளார்.
பரியேறும் பெருமாள், ஆம்பள, நான் மிருகமாய் மாற, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, காசேதான் கடவுளடா, லைப் ஆஃப் பை உள்ளிட்ட திரைப்படங்களை திரைப்பட விநியோகிஸ்தர் மதுராஜ் வாங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விற்பனை செய்து வந்துள்ளார். அந்த வகையில் நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளியான "ஷூ" திரைப்படத்தை தமிழக முழுவதும் திரையிடுவதற்கான உரிமைத்தையும் சேட்டிலைட் உரிமைத்தையும் திரைப்பட தயாரிப்பாளரான கார்த்திக் என்பவரிடமிருந்து ரூபாய் ஒரு கோடியே 15 லட்சத்திற்கு வாங்கி வெளியிட்டுள்ளார்.
ரூபாய் 17 லட்சம் கொடுத்து ஒப்பந்தம் செய்த நிலையில் மீதத்தொகையான ரூபாய் 98 லட்சத்தை தவணை முறையில் 45 ஆவது நாளான நவம்பர் மாதம் 29ஆம் தேதி ரூபாய் 45 லட்சமும், 90 ஆவது நாள் மீத பணமும் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யபட்டிருந்த நிலையில் படம் சரியாக ஓடாத காரணத்தினால் மதுராஜ் மீத பணத்தை கொடுப்பதற்கு சிறிது கால அவகாசம் வேண்டுமென தயாரிப்பாளர் கார்த்திக்கிடம் கேட்டு உள்ளார்.
Read More : நடிகர் யோகிபாபு மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார்!
மதுராஜின் அலுவலகத்தில் அவரது உதவியாளர்கள் பென்சர் மற்றும் கோபி ஆகிய இருவர் இருந்துள்ளனர்.
கார்த்திக் மற்றும் அவர் அழைத்துச் சென்ற 10 நபர்களும் பென்சர் மற்றும் கோபியை அடித்து அங்கிருந்து காரில் கடத்திச் சென்று தாம்பரம் அருகே லாட்ஜில் அறை எடுத்து தங்க வைத்துள்ளனர். அங்கு அவர்களை கட்டிப்போட்டு அடித்து மதுராஜிடம் தனது பணம் உடனடியாக வரவில்லை என்றால் அவர்களை கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மதுராஜ் பணத்தை ரெடி செய்து தருவதாக கூறியதன் பேரில் பென்சர் மற்றும் கோபியிடமிருந்து ரூ.70,000 பணம் மற்றும் செல்போன்களை பறித்துக்கொண்டு அவர்களை அன்று மாலையே விடுவித்தனர்.
இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களாக பென்சர் வீட்டுக்கு செல்லாததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் மதுராஜிடம் கேட்டுள்ளனர். இதனையடுத்து மதுராஜ், சினிமா தயாரிப்பாளரான கார்த்திக் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களான வண்டலூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ்(42), வினோத்குமார்(36) மற்றும் சொக்கலிங்கம்(22), பிரசாந்த்(23) ஆகிய நான்கு நபர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான சினிமா தயாரிப்பாளர் கார்த்திக் மற்றும் மற்ற நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள பிரசாந்த் மற்றும் சொக்கலிங்கம் மீது மதுரவாயல் காவல் நிலையம், வண்டலூர் காவல் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மேலும், இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Hero yogi babu