மாண்டஸ் புயல் பாதிப்புகளை முதலமைச்சர் ஆய்வு செய்த போது அவரது கான்வாயில் மேயர் பிரியா ராஜன் தொங்கியபடி சென்ற சம்பவம் தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை காசிமேடு பகுதியில் மாண்டஸ் புயல் மற்றும் மழை பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்ட பின்னர், அங்கிருந்து புறப்பட்ட போது அவரது கான்வாய் வாகனத்தில் மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் தொங்கியபடி பயணம் செய்தனர்.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
இது குறித்து அமைச்சர் சேகர் பாபுவிடன் செய்தியாளர்கள் கேட்டபோது, “முதல்வர் அடுத்த இடத்தில் ஆய்வுக்கு செல்வதால், அந்த இடத்திற்கு விரைவாக செல்வதற்காக மேயர் இயல்பாக பயணித்தார். அதுவும் பாதுகாப்பு வாகனம். ஆணுக்கு நிகராக துணிச்சாலாக பெண் பேரிடர் காலத்தில் பணி செய்வதை பாராட்ட வேண்டும். இதை அதிகார துஷ்பிரோயமாக பார்க்க கூடாது.' என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.