ஹோம் /நியூஸ் /சென்னை /

புழல் சிறையில் கைதிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட சிறைத்துறை டிஜிபி

புழல் சிறையில் கைதிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட சிறைத்துறை டிஜிபி

புழல் மத்திய சிறையில் ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்த சிறைத்துறை டிஜிபி சிறைவாசிகளுடன் தரையில் அமர்ந்து உணவருந்தினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சென்னை புழல் சிறையில் கைதிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார் சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி. அவருடன் வந்திருந்த காவல் துறை அதிகாரிகளும் கைதிகளுடன் சேர்ந்து அமர்ந்து உணவு உட்கொண்டனர்.  

  சென்னை புழல் மத்திய சிறையில் சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி திடீர் ஆய்வு செய்தார். தண்டனை, விசாரணை, மகளிர் என 3 பிரிவுகளில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் திடீர் ஆய்வு நடத்தினார். கைதிகளுக்கு கைத்தொழில் பயிற்றுவிக்கப்பட்டு ஆடைகள், மெழுகுவர்த்தி உள்ளிட்ட பல பொருட்களை கைதிகள் தயாரிக்கும் பகுதியிலும் ஆய்வு செய்தார்.

  Also see... நாளை அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும்... தமிழக அரசு அறிவிப்பு..!

  தொடர்ந்து கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அதன் பிறகு கைதிகளுடன் தரையில் அமர்ந்து டிஜிபி உணவு அருந்தினார். கைதிகளுடன் சிறைத்துறை டிஜிபி சமமாக அமர்ந்து உணவருந்திய நிகழ்வு கைதிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Chennai, Puzhal jail