Home /News /chennai /

நண்பரின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க திட்டம் போட்டு பதுங்கியிருந்த கும்பல்... போலீசாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கொலை சம்பவம் தடுப்பு..

நண்பரின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க திட்டம் போட்டு பதுங்கியிருந்த கும்பல்... போலீசாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கொலை சம்பவம் தடுப்பு..

திருவல்லிக்கேணியில் ஒரு நபரை கொலை செய்வதற்காக திட்டம்போட்டு வந்திருப்பது தெரியவந்தது.

திருவல்லிக்கேணியில் ஒரு நபரை கொலை செய்வதற்காக திட்டம்போட்டு வந்திருப்பது தெரியவந்தது.

திருவல்லிக்கேணியில் ஒரு நபரை கொலை செய்வதற்காக திட்டம்போட்டு வந்திருப்பது தெரியவந்தது.

திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு மேன்ஷனில் சந்தேகத்திற்கிடமான வகையில் இளைஞர்கள் சிலர் தங்கியிருப்பதாக திருவல்லிக்கேணி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து காவல் ஆய்வாளர் மோகன் ராஜ் தலைமையிலான போலீசார் அங்கு சென்ற போலீசார் அறை எண் 205, 305 ஆகியவற்றில் தங்கியிருந்த 14 நபர்களை சோதனை செய்தனர். அவர்களிடம் இரண்டு கத்தி, ஒரு வீச்சரிவாள், ஒரு கடப்பாரை ஆகிய பயங்கர ஆயுதங்களும் இரண்டு கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் 14 நபர்களையும் திருவல்லிக்கேணி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த டில்லிபாபு (20), சரத்குமார் (25), பரத்குமார் (20), சாய்காந்த்( 19), எண்ணூரைச் சேர்ந்த ஜனா (20), காசிமேட்டை சேர்ந்த விக்னேஷ் (19), திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த யுவன் சங்கர் ராஜா (20) உள்ளிட்ட நபர்களுடன் பள்ளி படிக்கும் மாணவர்கள் உட்பட 14 நபர்கள் என தெரியவந்தது.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் திருவல்லிக்கேணியில் ஒரு நபரை கொலை செய்வதற்காக திட்டம்போட்டு வந்திருப்பது தெரியவந்தது.

போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில் கடந்த 2021 ம் ஆண்டு ஐஸ் ஹவுஸ், கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் விக்கி (எ) காஞ்சி விக்கி என்பவர் கொலை செய்யப்பட்டார். காஞ்சி விக்கியை கொலை செய்த விக்கி, விஷ்வா, விஜய், சரத்குமார், மாட்டு சரத்குமார் ஆகிய ஐந்து நபர்கள் ஐஸ்ஹவுஸ் போலீசாரால் அப்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கொலை செய்யப்பட்ட விக்கி(எ) காஞ்சி விக்கி என்பவரின் நெருங்கிய நண்பரான திருமங்கலத்தை சேர்ந்த பிரா (எ) ஞானபிரகாஷ் என்பவர் தனது நண்பரின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சுற்றி வந்ததாகவும் குறிப்பாக காஞ்சி விக்கியை கொலை செய்த முக்கிய குற்றவாளியான வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சரத்குமார் என்பவரை கொலை செய்யும் நோக்கில் ஞானபிரகாஷ் சுற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஞானப்பிரகாஷ் தன்னை கொலை செய்யும் முன் அவரை கொலை செய்ய வேண்டும் என சரத்குமார் திட்டுமிட்டுள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து திருவல்லிக்கேணி பகுதியில் இன்று ஒரு நிகழ்ச்சிக்காக திருமங்கலத்தைச் சேர்ந்த ஞானபிரகாஷ் வருவதை அறிந்த சரத்குமார் இரு தினங்களுக்கு முன்பாகவே அவரை கொலை செய்வதற்குத் திட்டமிட்டதும் அதனடிப்படையில் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தனது நண்பர்களோடு தங்கியிருந்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில்தான் கொலை செய்ய திட்டம் போட்டு பயங்கர ஆயுதங்களுடன் லாட்ஜில் தங்கியிருந்த 7 இளஞ்சிறார் உட்பட 14 அவர்களை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர்.
மேலும், போலீசாரின் விசாரணையில் பரத்குமார் மீது திருட்டு, கொள்ளை, வாகன திருட்டு என 22 குற்ற வழக்குகளும், சரத்குமார் மீது 1 கொலை வழக்கு உட்பட திருட்டு, கொள்ளை, வாகன திருட்டு, வீடு புகுந்து திருடியது என சுமார் 21 குற்ற வழக்குகளும், யுவன்சங்கர் ராஜா மீது 3 குற்ற வழக்குகளும், ஜனா மீது 5 குற்ற வழக்குகளும், 3 இளஞ்சிறார்கள் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

மேலும், பரத்குமார் 2 இளஞ்சிறார்களுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில், நுங்கம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை பகுதிகளில் வழிப்பறி, செல்போன் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட 14 நபர்களில் பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த டில்லிபாபு (20), சரத்குமார் (25), பரத்குமார் (20), சாய்காந்த்( 19), எண்ணூரைச் சேர்ந்த ஜனா (20), காசிமேட்டை சேர்ந்த விக்னேஷ் (19), திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த யுவன் சங்கர் ராஜா(20) ஆகியோரை சிறையில் அடைத்த போலீசார் 7 இளஞ்சிறார்களை நீதிமன்ற உத்தரவுப்படி கூர்நோக்கு இல்லத்திற்கு திருவல்லிக்கேணி போலீசார் அனுப்பி வைத்தனர்.
Published by:Esakki Raja
First published:

Tags: Chennai

அடுத்த செய்தி