Home /News /chennai /

இது இந்துக்கள் நாடுதான்... ஆ.ராசா கருத்து ஏற்புடையது அல்ல - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

இது இந்துக்கள் நாடுதான்... ஆ.ராசா கருத்து ஏற்புடையது அல்ல - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

பிரேமலதா விஜயகாந்த்

பிரேமலதா விஜயகாந்த்

இது இந்துக்கள் நாடு தான்.  தேமுதிக எந்த ஒரு ஜாதி மத பாகுபாடும் இன்றி மக்களின் நன்மைக்காக உருவாக்கப்பட்ட கட்சி.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai | Tamil Nadu
    எந்த வித பாகுபாடும் இல்லாத கட்சி தேமுதிக என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

    தேமுதிக தொடங்கி 17 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் 18ஆம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் பொருளாளர், கட்சி கொடியினை ஏற்றி வைத்து,  500 நபர்களுக்கு இலவச தண்ணீர் குடங்கள் மற்றும் புடவைகளை வழங்கினார்.

    தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேமுதிக 18 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி இன்று தமிழ்நாடு முழுவதும் கட்சித் தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  தலைமை அலுவலகத்தில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை காரணமாக கட்சியில் சிறிது தொய்வு உள்ளது. ஆனால், எந்த நோக்கத்திற்காக கட்சி உருவாக்கப்பட்டதோ அதை நோக்கி கட்சி தொடர்ந்து பயணித்து வருகிறது என பேசினார்.

    மேலும், ‘2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக தேமுதிக தயாராகி வருகிறது. யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவெடுக்க தற்பொழுது சரியான நேரமில்லை இன்னும் தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகள் உள்ளதால், தற்போது கட்சியின் வளர்ச்சி குறித்த பணிகள் நடைபெற்று வருகிறது. உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும். அதே போல் தேமுதிக யாருடன் கூட்டணியில் இருக்கிறது என்பதனை தேமுதிக தான் அறிவிக்கும் கூட்டணி கட்சிகள் அல்ல ’ என கூறியுள்ளார்.

    ALSO READ | செல்லப்பிராணிகளுக்கு பிரச்சனையா? இனி கவலை இல்லை!! இந்தியாவிலே முதன் முறையாக தமிழகத்தில் கால்நடை மருத்துவர் ஆப் அறிமுகம்!!!

    தொடர்ந்து, இந்து மதம் தொடர்பாக அண்மையில் திமுக எம்பி ஆ.ராசா கூறிய கருத்திற்கு பதில் அளித்த பிரேமலதா,
    இது இந்துக்கள் நாடு தான்.  தேமுதிக எந்த ஒரு ஜாதி மத பாகுபாடும் இன்றி மக்களின் நன்மைக்காக உருவாக்கப்பட்ட கட்சி என தெரிவித்துள்ளார்.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: DMDK, Premalatha Vijayakanth, Vijayakanth

    அடுத்த செய்தி