முகப்பு /செய்தி /சென்னை / சென்னையில் நாளை எங்கெல்லாம் மின் தடை தெரியுமா?

சென்னையில் நாளை எங்கெல்லாம் மின் தடை தெரியுமா?

மின்தடை அறிவிப்பு

மின்தடை அறிவிப்பு

CHENNAI POWER CUT | மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai | Tamil Nadu

சென்னையில் நாளை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெரம்பூர், தாம்பரம், பொன்னேரி பகுதியில் அமைந்துள்ள கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் : 

பெரம்பூர் பகுதி: பெரியார் நகர் 1,2,3,4வது தெருக்கள், சந்திரசேகரன் சாலை, கந்தசாமி சாலை.

தாம்பரம் பகுதி: பம்மல் அன்னை தெரசா தெரு, தென்றல் நகர், கணபதி நகர், ஈ.பி.காலனி, மரியன் தெரு ராஜகீழ்பாக்கம் மாருதி நகர், பாக்கியம் நகர், திருமூர்த்தி நகர், கற்பகம் அவென்யூ, சாம்ராஜ் நகர் 8வது தெரு கடப்பேரி ஆர்.பி.ரோடு பகுதி, அண்ணாசாலை, காயத்திரி நகர், வினோபோஜி நகர், அஸ்தினாபுரம் பேருந்து நிலையம் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதி.

பொன்னேரி பகுதி: மாதர்பாக்கம் மாநெல்லூர், கண்ணம்பாக்கம், ஈகுவர்பாளையம், என்.எஸ்.நகர், ராசசந்திராபுரம், 33 கி.வோ. மத்சயநாயகி இரும்பு கம்பெனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின் தடை செய்யப்படுகிறது.

First published:

Tags: Chennai power cut, Power Shutdown, Shutdown