ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் நாளை பவர் கட்.. பிரதான பகுதிகளில் மின்தடை.. உங்க ஏரியா லிஸ்ட்ல இருக்கா?

சென்னையில் நாளை பவர் கட்.. பிரதான பகுதிகளில் மின்தடை.. உங்க ஏரியா லிஸ்ட்ல இருக்கா?

மின் தடை

மின் தடை

Chennai Power Cut | பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மீண்டும் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னையில் நாளை  (08.12.2022 )  பராமரிப்புப் பணி காரணமாக முக்கியப் பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது. 

பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை ஒரு சில பகுதிகளிலும்  காலை 09.00 மணி முதல் மதியம் 5.00 மணிவரை சில பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி,

சென்னையில் 08.12.2022 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ஆவடி பட்டாபிராம் துணை மின்நிலையத்தில் கூடுதல் 16 எம்.வி.ஏ உயரழுத்த மின்மாற்றி நிறுவதற்காக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

இன்று மாலை மாண்டஸ் புயல்.. ரெட் அலெர்ட்.. அதிகனமழைக்கான எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

ஆவடி பகுதி : பட்டபிராம் சி.டி.எச்.ரோடு, ஐயப்பன் நகர், தண்டுரை, ராஜீவ்காந்தி நகர், சத்திரம், காந்தி நகர், பட்டபிராம் முழுவதும், வி.ஜி.பி.நகர் முழுவதும், மாடர்ன் சிட்டி, சிரஞ்சீவி நகர், டிரைவர்ஸ் காலனி, கண்ணப்பாளையம், லட்சுமி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

மாலை 5.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னையில் 08.12.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், ஐடி காரிடர், ஆவடி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

தாம்பரம் பகுதி : கடப்பேரி ஆர்.பி.ரோடு ஒரு பகுதி, வேல்முருகன் தெரு, வினோபோஜி நகர், மாணிக்கம் நகர், பி.பி.ஆர்.தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்

ஐடி காரிடர் பகுதி : சிறுசேரி நாவலூர் சிப்காட், புதுபாக்கம் பகுதி, ஏகாட்டூர், ஓ.எம்.ஆர், சிப்காட் சிறுசேரி முழுவதும் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

ஆவடி பகுதி : அலமாதி கோவிந்தபுரம், வெண்மனி நகர், பால்பண்ணை சாலை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

First published:

Tags: Chennai, Chennai power cut, Power Shutdown