Home /News /chennai /

Chennai Power Shutdown: சென்னையில் முக்கிய பகுதிகளில் வரும் ஞாயிறு, திங்கள் அன்று மின் தடை - உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க..!

Chennai Power Shutdown: சென்னையில் முக்கிய பகுதிகளில் வரும் ஞாயிறு, திங்கள் அன்று மின் தடை - உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க..!

மின்தடை பகுதிகள்

மின்தடை பகுதிகள்

Power Shutdown | பராமரிப்புப் பணி காரணமாக 24.07.2022, 25.07.2022 ஆகிய நாட்களில் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    24.07.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அம்பத்தூர்/சிட்கோ துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அம்பத்தூர் பகுதி: சிட்கோ; 5வது, 6வது, 7வது தெருக்கள், கண்ணன் கோவில் தெரு.

    தொடர்ந்து, சென்னையில் 25.07.2022 (திங்கட்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், தாம்பரம், தி.நகர், பெரம்பூர், தரமணி ஐடி காரிடர் ஆகிய பகுதிகளின் துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    மயிலாப்பூர் பகுதி: மயிலாப்பூர் கிழக்கு; டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, ராயபேட்டை நெடுஞ்சாலை, வி.எம்.தெரு லஸ் சர்ச் ரோடு பகுதி.

    தாம்பரம் பகுதி: சிட்லப்பாக்கம் சர்வ மங்கள நகர் முழுவதும், அம்பேத்கர் நகர், மீனாட்சி தெரு, திரு.வி.க. நகர், மணிமேகலை தெரு, ராதா நகர் சீனிவாச நாயுடு தெரு, தனலட்சுமி தெரு, எ.ஜி.எஸ் காலனி, நன்மங்களம் மெயின் ரோடு, நெமிலிச்சேரி நெடுஞ்சாலை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

    தி நகர் பகுதி: மேற்கு மாம்பலம் பரோடா மெயின் தெரு, பஞ்சாப் கார்டன், எல்லையம்மன் கோயில் தெரு, காந்தி தெரு, புஸ்பவதியம்மாள் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

    பெரம்பூர் பகுதி: குமரன் நகர், சக்திவேல் நகர், மூலக்கடை, வெற்றி நகர், சிம்சன் கம்பனி குழுமம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

    தரமணி ஐடி காரிடர் பகுதி : பாலாஜி நகர், சூளைமா நகர், பால்மாரா கார்டன், மவுண்ட்பேட்டன் தெரு, கண்ணகி நகர் துரைப்பாக்கம்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Chennai, Chennai power cut, Power cut

    அடுத்த செய்தி