ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்றும், நாளையும் மின்தடை : எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்றும், நாளையும் மின்தடை : எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

மாதிரி படம்

மாதிரி படம்

Chennai Power cut Today and Tomorrow | சென்னையில்  இன்று (டிசம்பர் 27) நாளை (டிசம்பர் 28) இந்த இடங்களில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாரியாம் அற்வித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னையில் 27.12.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக போரூர், அம்பத்தூர், ஐடி காரிடர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனவும் மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

போரூர் பகுதி : திருமுடிவாக்கம் குன்றத்தூர் பகுதி, திருமுடிவாக்கம் தொ.பே, பழந்தண்டலம், சோமங்கலம், வரதராஜபுரம், பெரியார் நகர், வழுதலம்பேடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

அம்பத்தூர் பகுதி : நொளம்பூர் என்.என்.எஸ் எச்.ஐ.ஜி எம்.ஐ.ஜி, அடையாளம்பட்டு, முகப்பேர் மேற்கு ராஜன்குப்பம், ஜெஸ்வந்த் நகர், வெள்ளாளர் நகர், கங்கை அம்மன் நகர், கீழ் அயனம்பாக்கம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

ஐடி காரிடர் பகுதி : சிறுசேரி பாலடியம்மன் கோயில் தெரு, நாவலூர் சிக்னல், அப்துல்கலாம் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

அதேபோல நாளை  28.12.2022 புதன்கிழமையும் சென்னையில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை 28.12.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கே.கே.நகர், அடையார் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்ப்ட்டுள்ளது.

கே.கே.நகர் பகுதி : வளசரவாக்கம் ஓம் சக்தி நகர் 3 முதல் 7வது தெரு வரை, கே.கே.பொன்னுரங்கன் சாலை மெயின் ரோடு ஆகிய இடங்கள் அடங்கும்.

அடையார் பகுதி : கொட்டிவாக்கம் கந்தசாமி நகர் 3, 4 மற்றும் 6வது தெருக்கள், கந்தசாமி நகர் 3 மற்றும் 4வது தெருக்கள் விரிவு ஆகிய இடங்கள் அடங்கும்.

First published:

Tags: Chennai, Chennai power cut, Power Shutdown, TNEB