ஹோம் /நியூஸ் /சென்னை /

" தம்பி வா.. தலைமையேற்க வா " கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவாக சென்னையில் போஸ்டர் 

" தம்பி வா.. தலைமையேற்க வா " கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவாக சென்னையில் போஸ்டர் 

கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

காமராஜர், கார்த்திக் சிதம்பரம் கையை பிடித்து வருவதுபோலவும், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனின் படமும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றம் வரவுள்ள நிலையில், தலைமையேற்க வா என அக்கட்சியின் எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவாக சென்னையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகன், கார்த்திக் சிதம்பரம் எம்.பி-யின் பிறந்தநாள் நவம்பர் 16ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், கார்த்திக் சிதம்பரத்தின் ஆதரவாளர்கள், சென்னைசேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் எதிரே தம்பி வா தலைமையேற்க வா என வாசகத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

மேலும், அந்த சுவரொட்டியில் பெருந்தலைவர் காமராஜர், கார்த்திக் சிதம்பரம் கையை பிடித்து வருவதுபோலவும், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனின் படமும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளன.

ஏற்கனவே மாநில தலைவரை தேர்வு செய்யும் அதிகாரத்தை தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு "வா தம்பி, தலைமையேற்க வா", என்று கார்த்திக் சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் சென்னையில் போஸ்டர் ஓட்டியுள்ளது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபாவிற்கு பெண் குழந்தை!

கடந்த 2020- ம் ஆண்டு, கார்த்திக் சிதம்பரத்தின் பிறந்தநாளையொட்டி, அதிமுகவின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர், காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரத்திற்கு செங்கோல் வழங்குவது போல் படத்துடன் எங்கள் வாத்தியாரே என்ற வாசகத்தோடு ஒட்டப்பட்ட போஸ்டர் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Published by:Murugesh M
First published:

Tags: Congress, Karti Chidambaram