ஹோம் /நியூஸ் /சென்னை /

பூந்தமல்லியில் விசிலை விழுங்கிய ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

பூந்தமல்லியில் விசிலை விழுங்கிய ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

விசில்

விசில்

Poonamallee | பூந்தமல்லியில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது விசிலை விழுங்கிய ஒரு வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Poonamallee, India

  திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, லட்சுமிபுரம் ரோடு, பத்மாவதி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(38), இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி வனஜா இவர்களுக்கு தர்சன்(3), என்ற மகனும், கயல்விழி என்ற 1 வயது பெண் குழந்தையும் உள்ளது.

  இந்த நிலையில் வழக்கம் போல் குழந்தை வீட்டில் விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடி கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்து விசிலை எடுத்து விழுங்கியதில் மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை கயல்விழி மயங்கியது. இதனை கண்டு பெற்றோர் அலறி அடித்து கொண்டு குழந்தையை தூக்கிய போது குழந்தை மூச்சு திணறலால் மயங்கியது.

  இதையடுத்து குழந்தையின் முதுகில் தட்டியபோது வாயிலிருந்து விசில் கீழே விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  அப்போதுதான் குழந்தை விசிலை விழுங்கியது தெரியவந்தது. இதையடுத்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

  Also see...கரூர் அருகே படிக்கட்டில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்...

  இதுகுறித்து பூந்தமல்லி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்து போன குழந்தை கயல்விழி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். விளையாடும் போது குழந்தை விசில் விழுங்கி இறந்து போன சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  செய்தியாளர்: சோமசுந்தரம், பூந்தமல்லி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Poonamallee Constituency