முகப்பு /செய்தி /சென்னை / காதலன் திருமணத்தை தடுத்து நிறுத்திய காதலி... மாயமான காதலன் தற்கொலையா? உடலை தேடும் வீரர்கள்!

காதலன் திருமணத்தை தடுத்து நிறுத்திய காதலி... மாயமான காதலன் தற்கொலையா? உடலை தேடும் வீரர்கள்!

உடலை தேடும் போலீசார்

உடலை தேடும் போலீசார்

Poonamalle dead body search | திருமணம் நிறுத்தப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த காதலன் அவரது உறவினர்களுக்கு தற்கொலை செய்து கொள்ள போவதாக குறுஞ்செய்தி அனுப்பியதால் ஏரியில் குதித்தாரா என தேடி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Poonamallee, India

சென்னை போருர் ஏரியில் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படும் நிஷாந்தின் உடலை தீயணைப்புத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் சூர்யா என்ற பெண்  நிஷாந்த் என்ற வாலிபர் தன்னை கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து 68 லட்சம் வரை மோசடி செய்ததாக புகார் அளிதார். நிஷாந்த் மீது அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து காவல்துறையினர் நிஷாந்த், அவரது தந்தை, தாய் ஆகிய மூவர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. நிஷாந்திற்கு பிரபல தொழிலதிபர் மகளுடன் கடந்த 3ஆம் தேதி நடக்கவிருந்த திருமணமும் நிறுத்தப்பட்டது.

கடந்த 4 தினங்களாக தலைமறைவாக இருந்த நிஷாந்த் சென்னை போருர் ஏரியில் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நிஷாந்த் அவரது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு தற்கொலை செய்து கொள்ள போவதாக வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பியிருந்த நிலையில் போருர் ஏரி அருகே நிஷாந்தின் கார் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனால், நிஷாந்த் போரூர் ஏரியில் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்ற சந்தேகித்துள்ள காவல்துறையினர் அவரது உடலை ஏரியில் தேடி வருகின்றனர்.

செய்தியாளர்: சோமசுந்தரம், பூந்தமல்லி.

First published:

Tags: Chennai, Crime News, Suicide attempt