ஹோம் /நியூஸ் /சென்னை /

பிரியாணி வாங்க க்யூவில் நின்ற முதியவரை காலால் எட்டி உதைத்த போலீஸ்..!

பிரியாணி வாங்க க்யூவில் நின்ற முதியவரை காலால் எட்டி உதைத்த போலீஸ்..!

முதியவரை தாக்கிய போலீஸ்

முதியவரை தாக்கிய போலீஸ்

எம்.ஜி.ஆரின் 106ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கொத்தவால்சாவடியில் அதிமுகவினர் சார்பில் முட்டையுடன் கூடிய மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை கொத்தவால்சாவடியில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் பிரியாணி வாங்க நின்ற முதியவரை காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கீழே இழுத்துத் தள்ளி காலால் உதைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

எம்.ஜி.ஆரின் 106ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கொத்தவால்சாவடியில் அதிமுகவினர் சார்பில் முட்டையுடன் கூடிய மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. சுமார் 2000 பேருக்கு உணவு தயாரிக்கப்பட்ட நிலையில் அளவுக்கு அதிகமான மக்கள் கூடியதால் கூட்டம் நிரம்பி வழிந்தது.

அப்போது பணியில் இருந்த கொத்தவால்சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக ஆக்ரோசமாக வரிசையை சரி செய்தார். அப்போது முதியவர் ஒருவரை கீழே இழுத்து தள்ளிய அவர் காலால் எட்டி உதைத்தார். காவல் உதவி ஆய்வாளரின் சர்ச்சைக்குரிய இவ்விவகாரம் தொடர்பான வீடியோ வெளியானது. இதையடுத்து, தாக்குதல் தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Atrocities of Police, Birthday, MGR