ஹோம் /நியூஸ் /சென்னை /

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீதான பண மோசடி புகார் - மீண்டும் விசாரிக்கும் போலீசார்!

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீதான பண மோசடி புகார் - மீண்டும் விசாரிக்கும் போலீசார்!

எஸ் ஏ சந்திரசேகர்

எஸ் ஏ சந்திரசேகர்

பணத்தைத் திருப்பி வழங்காத எஸ்.ஏ சந்திரசேகர் கொலை மிரட்டல் விடுத்துவருவதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் மீதான பண மோசடி புகார் மீண்டும் விசாரிக்கப்படும் என சென்னை விருகம்பாக்கம் போலீசார் தெரிவித்துள்ளார்.

இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர், டிராபிக் ராமசாமி எனும் திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை வழங்குவதாகக் கூறி பிரம்மானந்தம் சுப்பிரமணியம் எனும் நபரிடம் 21 லட்ச ரூபாய் பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க :  ''தோனியும்தான் நடிக்கிறார்.. ஆன்லைன் ரம்மி அறிவுசார் விளையாட்டு..'' - சரத்குமார் பேச்சு!

இதனிடையே படத்தை எஸ்.ஏ. சந்திரசேகரே வெளியிட்ட நிலையில், வாங்கிய 21 லட்ச ரூபாய் பணத்தைத் திருப்பிச் செலுத்தவில்லை எனக் கூறி பாதிக்கப்பட்டவர் சார்பில் தயாரிப்பாளர் மணிமாறன் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த சிட்டி சிவில் நீதிமன்றம், வட்டியோடு சேர்த்து 27 லட்ச ரூபாய் வழங்க எஸ்.ஏ. சந்திரசேகருக்கு உத்தரவிட்டது.

ஆனால் பணத்தைத் திருப்பி வழங்காத எஸ்.ஏ சந்திரசேகர் கொலை மிரட்டல் விடுத்துவருவதாக வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் புகார்தாரர் மணிமாறன் ஆகியோரிடம் விசாரணை நடத்த விருகம்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Money Laundering, Sa chandrahekhar