Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /சென்னை /

19 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டன - நீதிமன்றத்தில் கூறிய சென்னை காவல்துறை.. விடுதலையான 3 பெண்கள்!

19 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டன - நீதிமன்றத்தில் கூறிய சென்னை காவல்துறை.. விடுதலையான 3 பெண்கள்!

மாதிரி படம்

மாதிரி படம்

கஞ்சாவை எலிகள் தின்றதாக காவல்துறை விளக்கமளித்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னையில் 3 பெண்கள் கைது செய்யப்பட்ட வழக்கில் 19 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டன என நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கமளித்ததால் நீதிமன்றம் அதிருப்தியடைந்துள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், கஞ்சா விற்றதாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 30 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில், பறிமுதல் செய்ததாக கூறப்படும் 30 கிலோ கஞ்சாவில் 11 கிலோ கஞ்சாவை மட்டுமே போலீஸார் ஒப்படைத்தனர்.

காவல் நிலையத்தில் வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களை எலிகள் கொஞ்சம் கொஞ்சமாக தொடர்ந்து கடித்ததால், அதன் அளவு குறைந்து விட்டதாக அதிகாரிகள் பதில் அளித்தனர். இந்த பதிலை கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதி குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை என்று கூறி 3 பெண்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

First published:

Tags: Chennai Police, Ganja, TN Police