ஹோம் /நியூஸ் /சென்னை /

அதிமுக உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு..

அதிமுக உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு..

அதிமுக

அதிமுக

ADMK hunger strike | வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் செய்யவரும் அதிமுகவினரை கைது செய்ய காவல்துறை தயாராக உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

    சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை நியமிக்காததைக் கண்டித்து அதிமுக சார்பில் சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்த அதிமுக முடிவு செய்துள்ளது.

    அதிமுக-வில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்பினருக்கிடையே மோதல் வலுத்த நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமார் நியமிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து சட்டப்பேரவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி அங்கீகரிக்கப்பட்ட பதவி இல்லை என சபாநாயகர் அறிவித்தார், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

    மேலும், நேற்றைய அவை நடவடிக்கைகளில் அவர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக அறிவித்தது.ஆனால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி, காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.

    Also Read: இது நடந்திருந்தால் ஜெயலலிதா உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கும்- ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் தகவல்

    வள்ளுவர் கோட்டம் பகுதியில் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. எனினும், தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த அதிமுக-வினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் செய்யவரும் அதிமுகவினரை கைது செய்ய காவல்துறை தயாராக உள்ளது.

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: ADMK, Chennai, Strike