Home /News /chennai /

விசாரணை என்ற பெயரில் குற்றம்சாட்டப்பட்டவர்களை போலீசார் துன்புறத்தக்கூடாது - உயர்நீதிமன்றம் உத்தரவு

விசாரணை என்ற பெயரில் குற்றம்சாட்டப்பட்டவர்களை போலீசார் துன்புறத்தக்கூடாது - உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

விசாரணைக்கு ஆஜராகுமாறு எழுத்துப்பூர்வமாக மட்டுமே சமமன் அனுப்ப வேண்டும், அவ்வாறு அனுப்பும் போது ஆஜராக வேண்டிய நாள், நேரம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் எனவும் விசாரணையின் போது நடக்கும் நிகழ்வுகளை முழுமையாக எழுத்து முறையில் குறிப்பெடுத்து வைக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    விசாரணை என்ற பெயரில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்துறையினரால் துன்புறுத்தப்படுவது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம் விசாரணைக்கு அழைப்பதற்கான வழிமுறைகளையும் வகுத்து உத்தரவிட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தை பிரகாஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர்  தன்னை துன்புறுத்துவதாக மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்ட அவரை, காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று துன்புறுத்துவதாகவும் அதற்கு தடை விதிக்க வேண்டுமெனவும்  கோரியிருந்தனர்.

    இந்த வழக்கை நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், மனுதாரர்கள் மீது புகார் நிலுவையில் இருப்பதாகவும் அதுகுறித்த விசாரணை நடத்தவே அவர்கள் காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.

    இதனையடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், குற்ற வழக்குகளை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு, போதிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடைமுறைகளில் நீதிமன்றங்கள் தலையிடுவதில்லை எனவும்  கூறியுள்ளார். இந்நிலையில், விசாரணை என்ற பெயரில்  காவல்துறையினர் துன்புறுத்துவதாகவும் அதற்கு தடை விதிக்கக்கோரியும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதாக தெரிவித்த நீதிபதி, இது போன்ற சூழலில் நீதிமன்றம் தலையிடும் என கூறியுள்ளார்.

    இதையும் வாசிக்க: திமுக வெற்றிக்கு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தான் காரணம் - ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

    குற்றம்சாட்டப்பட்டவர்களை விசாரணைக்கு அழைப்பதற்காக வழிகாட்டு விதிகளை வகுத்தும் நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, விசாரணைக்கு ஆஜராகுமாறு எழுத்துப்பூர்வமாக மட்டுமே சம்மன் அனுப்ப வேண்டும், அவ்வாறு அனுப்பும் போது ஆஜராக வேண்டிய நாள், நேரம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் எனவும் விசாரணையின் போது நடக்கும் நிகழ்வுகளை முழுமையாக எழுத்து முறையில் குறிப்பெடுத்து வைக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.
    மேலும் விசாரணைக்கு அழைப்பவர்களை துன்புறுத்த கூடாது எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Chennai High court, Police investigation

    அடுத்த செய்தி