Home /News /chennai /

என்னது டேஞ்சர் டிரைவிங்கா.. நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்க..? - டிராபிக் போலீசுக்கு சாபம் விட்ட வாகனஓட்டி

என்னது டேஞ்சர் டிரைவிங்கா.. நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்க..? - டிராபிக் போலீசுக்கு சாபம் விட்ட வாகனஓட்டி

போக்குவரத்து போலீசார்

போக்குவரத்து போலீசார்

Chennai | விதிமுறை மீறி சிக்னலை கடந்து சென்ற வாகனத்திற்கு அபராதம் விதித்த போலீஸ்காரருக்கு சாபம் விட்ட வாகன ஓட்டி இணையத்தில் வைரலாகும் வீடியோ.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    சென்னை அருகே போரூர் சிக்னலில் பணியில் இருந்த போலீசார் அந்த வழியாக விதிமுறை மீறி சிக்னலை கடந்து சென்ற  வாகனத்தை மடக்கி ரூ.1200 அபராதம் வீதித்தனர். இதனை கண்ட வாகன ஓட்டி அந்த போக்குவரத்து போலீசாரிடம் எதற்காக இவ்வளவு அபராதம் விதித்தீர்கள் என்று கேள்விக் கேட்டார். அதற்கு அந்த போலீசார் போக்குவரத்து விதிகளை மீறியதால் அபராதம் விதித்ததாக கூறியுள்ளார்.

    இதனையடுத்து போலீஸ்காரரிடம் அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஏன்.. சார் வாங்குற சம்பளம் 500 இதுல 1200 ரூபாய் அபராதமா என வாதம் செய்கிறார். மேலும் தான் விதிமுறை மீறி சென்றால் சிசிடிவி காட்சிகளை காட்டுமாறு அந்த நபர் கேட்க அதற்கு அதனை நீதிமன்றத்தில் காட்டுவதாக போக்குவரத்து போலீசார் கூலாக பதில் கூறுகிறார்.

    Also see... கழக முன்னோடிகளை பெரியாராக, அண்ணாவாக பார்த்து மகிழ்கிறேன் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

    ரோட்டுல எவ்ளோ பேர் ட லைசென்ஸ்  இல்லாம வண்டி ஓட்டுறாங்க அவங்க எல்லாம் தெரியலையா சார்.. இந்த போலீஸ்காரர் இப்படிதான் எல்லா வண்டியையும் பிடிச்சு 1,000, 2000 என அபராதம் போடுறார் என வேதனையோடு நொந்துக்கொண்டார். மேலும்  இவ்வளவு அபராதம் விதித்த நீங்கள் நல்லாவே இருக்க மாட்டீர்கள் என அந்த வாகன ஒட்டி சாபம் விட்டு அங்கிருந்து கிளம்பி செல்லும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    செய்தியாளர்: சோமசுந்தரம், பூந்தமல்லி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chennai, Road Safety, Viral Video

    அடுத்த செய்தி