Home /News /chennai /

கள்ளக்காதலி மகளுக்கு 13 வயதில் இருந்து பாலியல் தொல்லை.. காவல் உதவி ஆய்வாளர் போக்சோவில் கைது

கள்ளக்காதலி மகளுக்கு 13 வயதில் இருந்து பாலியல் தொல்லை.. காவல் உதவி ஆய்வாளர் போக்சோவில் கைது

போக்சோவில் காவலர் கைது

போக்சோவில் காவலர் கைது

Chennai | கள்ளக் காதலியின் மகளை 13 வயதில் இருந்து காவல் உதவி ஆய்வாளர் பாலியல் வன்கொடுமை செய்து வந்தது விசாரணையில் அம்பலம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
சென்னை மாநகர காவல் துறையில் விஐபிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் பாதுகாப்பு பிரிவில்(SCP) உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பாண்டியராஜ்(50). இவர் ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜை வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

போலீசார் விசாரணையில், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கணவனை பிரிந்த பெண் ஒருவருடன் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கள்ள உறவில் காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜ் இருந்து வந்துள்ளார். காவல் உதவி ஆய்வாளருடன் கள்ள உறவில் இருந்த அந்த பெண்ணுக்கு அப்போது பள்ளி படிக்கும் மகள் இருந்து வந்துள்ளார்.

காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜ் அந்த பெண்ணுடன் தகாத உறவில் இருந்த போது கடந்த 2015 ம் ஆண்டில் 13 வயதாக இருந்த சிறுமிக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அத்துமீறிய பாண்டியராஜ் சிறுமியை பாலியல் வன்கொடுமையும் செய்து வந்துள்ளார் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது அந்தப் பெண் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். மீண்டும் அந்த பெண்ணை, காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜ் பாலியல் உறவுக்கு வருமாறு பல்வேறு விதங்களில் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இல்லையென்றால் பாலியல் வன்கொடுமை செய்த காலகட்டத்தில் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு விடுவதாக கூறி மிரட்டி வந்துள்ளார்.

இதனால், அந்த பெண் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.
பாலியல் புகார் தொடர்பாக விசாரணை நடத்தியதில் காவல் உதவி ஆய்வாளர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜை வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Also see... வேலூரில் முடி வெட்டிக் கொண்டு பணம் இல்லை என கூறிய இளைஞர் கழுத்து அறுத்துக் கொலை...

7 ஆண்டுகளுக்கு முன்பு 13 வயது சிறுமியை தொடர் பாலியல் வன்கொடுமை செய்து வந்த காவல் உதவி ஆய்வாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Chennai, Crime News, Pocso, Sexual harassment

அடுத்த செய்தி